நீரில் ஊறவைத்த உலர் திராட்சை தண்ணீர்!! குடிப்பதால் இவ்வளவு பயன்கள்!!

0
60

நீரில் ஊறவைத்த உலர் திராட்சை தண்ணீர்!! குடிப்பதால் இவ்வளவு பயன்கள்!!

உடலில் ஏற்படும் சில லேசான அடிப்படை பிரச்சனைகளை உணவின் மூலமே எப்போதும் சரி செய்ய வேண்டும். மருந்து மற்றும் மாத்திரைகளை விட உணவு எப்போதுமே சிறந்த தீர்வாக இருக்கிறது.

நம்முடைய பல பொதுவான உடல்நலப் பிரச்சினைகளுக்கு எளிதான தீர்வு நாம் எப்போதாவது சாப்பிடும் பழங்களில் அதிகம் இருக்கும். ஆரோக்கியமான மற்றும் சத்தான உலர்ந்த பழங்கள் நம்மை சுற்றி இருந்தாலும் கூட அவற்றை சாப்பிடுவதில் நாம் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை.

உலர் பழங்களில் எப்போதுமே முதலிடத்தில் இருப்பது திராட்சை தான். சாதாரணமாகவே திராட்சை பழம் மிகவும் சத்தானது. அவற்றை உலர்த்தும் செயல்முறை திராட்சையை மேலும் அதிக ஊட்டச்சத்து மற்றும் கலோரி மிக்கதாகக்குகிறது.

ஒரு கையளவு உலர் திராட்சையில் 108 கலோரிகள், ஒரு கிராம் புரதச்சத்து, 29 கிராம் கார்போஹைட்ரேட், ஒரு கிராம் ஃபைபர், 21 கிராம் சர்க்கரை ஆகியவைத் தவிர இரும்பு, பொட்டாசியம், காப்பர், வைட்டமின் பி 6, மாங்கனீஸ், போரான் போன்ற சத்துக்களும் நிரம்பி உள்ளன.

இவ்வாறு சத்துக்கள் நிறைந்த இந்த உலர்ந்த திராட்சையை நாம் ஊற வைத்து அந்த தண்ணீரை குடிப்பதன் மூலம் ஏராளமான பயன்களை அடைகின்றோம்.அந்தவகையில் தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

1:இந்த பானம் கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கி, இரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது.

2:அசிடிட்டி பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளவர் உலர் திராட்சை தண்ணீரை குடிப்பது உங்கள் வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவு ஒழுங்குபடுத்தப்படுத்த உதவும்.

3:இரவு முழுவதும் உலர் திராட்சை ஊறவைக்கப்பட்ட தண்ணீரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

4:உலர் திராட்சை தண்ணீர் ரத்தத்தை சுத்திகரிக்கும் முக்கிய பொருளாக உள்ளது. எனவே இது உங்களுடைய இதய ஆரோக்கியத்தை பராமரிக்கவும், உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கவும் உதவுகிறது.

5:உலர் திராட்சை தண்ணீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தும். இது மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளை தடுத்து, குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது.

6:தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது உடல் எடையை குறைக்க உதவும் .

author avatar
Parthipan K