வடகிழக்கு பருவ மழையின் தீவிரத்தால்.. அடுத்த 3 நாட்களுக்கு நான் ஸ்டாப் கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

0
54
#image_title

வடகிழக்கு பருவ மழையின் தீவிரத்தால்.. அடுத்த 3 நாட்களுக்கு நான் ஸ்டாப் கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

கடந்த அக்டோபர் மாத இறுதியில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தமிழகம் மற்றும் புதுவையை ஒரு காட்டு காட்டி வருகிறது. விடாது பெய்து வரும் பருவ மழையால் ஒருபுறம் நீர் நிலைகள் நிரம்பி வரும் நிலையில் மறுபுறம், மழை நீர் விவசாய நிலங்களை ஒரு பதம் பார்த்து வருகிறது.

தொடக்கத்தில் சாதாரணமாக தெரிந்த பருவமழை நாளுக்குள் நாள் உக்கிரமடைந்து அதன் வேலையை காட்டி வரும் நிலையில் அதன் வீரியம் இந்த மாத இறுதி வரை நீட்டிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

அதன்படி தீவிரமடைந்துள்ள பருவமழை அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தை பதம் பார்க்க இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது. இந்த கனமழையில் சிக்க போகும் 18 மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட 18 மாவட்டங்கள் இவை தான்…

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி தஞ்சாவூர், திருச்சி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து இருக்கும் வானிலை ஆய்வு மையம் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்து இருக்கிறது.