சட்டசபையில் பரபரப்பு! கதறி அழுத துரைமுருகன்!

0
81

மூன்று தினங்கள் கழித்து இன்றைய தினம் மறுபடியும் சட்டசபை கூட்டத்தொடர் கூடியது அலுவல் ஆய்வு குழு எடுத்த முடிவின் அடிப்படையில், இன்று முதல் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் ஆரம்பித்திருக்கிறது.இந்த சூழ்நிலையில், சட்டசபையின் பொன்விழா காணும் துரைமுருகனுக்கு பாராட்டு தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் போது உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் துரைமுருகனை புகழ்ந்து, பாராட்டி, வாழ்த்தி பேசினார் அப்போது இதனை கேட்டுக்கொண்டிருந்த துரைமுருகன் உடனடியாக கண்ணீர் சிந்தி ஆனந்தக் கண்ணீர் விட்டு கதறி அழுதிருக்கிறார்.

முதலமைச்சர் ஸ்டாலின் பேசும்போது நூற்றாண்டு காணும் தமிழக சட்டமன்றத்தின் அரை நூற்றாண்டைத் தாண்டிய துரைமுருகன் அவர்கள் எனக்கு வழித் துணையாக இருந்து வருகின்றார். கட்சிக்கும், ஆட்சிக்கும் துணையாக எப்போதும் துரைமுருகன் செயல்பட்டு வருகின்றார் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ் எப்போதும் பரபரப்பாக பேசுவார், ஆனாலும் அடுத்த வினாடியே இனிமையாக உரையாற்றும் ஆற்றல் உடையவர் துரைமுருகன். சட்டசபையில் 50 ஆண்டுகள் எல்லோரையும் கவர்ந்தவர் அமைச்சர் துரைமுருகன். ஆளுங்கட்சி ஆனாலும் சரி, எதிர்க்கட்சி ஆனாலும் சரி, எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருபவர் அமைச்சர் துரைமுருகன் என்று ஓபிஎஸ் தன்னுடைய பாராட்டு உரையில் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து உரையாற்றிய நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நான் நன்றிக்கடன் பட்டவனாக தன் வாழ்நாள் முழுவதும் இருப்பேன் என கூறினார். அதோடு இவ்வளவு பற்றும், பாசமும், முதலமைச்சரின் மீது வைத்திருப்பார் என்று நான் நினைக்கவில்லை என துரைமுருகன் தெரிவித்தார்.