கிராமப்புறங்களில் கல்வி வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்- சவுமியா அன்புமணி!

0
344
Education should be developed in rural areas - Soumya Anbumani!
Education should be developed in rural areas - Soumya Anbumani!

கிராமப்புறங்களில் கல்வி வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்- சவுமியா அன்புமணி!

சென்னை பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்க விழாவில் பேசிய சவுமியா அன்புமணி அவர்கள் நகரங்களை போலவே கிராமப்புறங்களிலும் கல்வி வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தில் முன்னாள் மாணவர்கள் சங்கம் புத்துயிர் பெற்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த சங்கத்தின் தொடக்க விழா பல்கலைக்கழக நூற்றாண்டு கட்டிட வளாக அரங்கில் நேற்று விமர்சையாக நடைபெற்றது. இந்த தொடக்க விழாவிற்கு சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் எஸ்.கவுரி தலைமை தாங்கினார். மேலும் பதிவாளர் எஸ்.ஏழுமலை, முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் என்.மதிவாணன், பல்கலைக்கழக டீன் எஸ்.தேன்மொழி, இணைச் செயலாளர் எஸ்.ஆம்ஸ்ட்ராங்க் ஆகியோர் இந்த விழாவிற்கு முன்னிலை வகித்தனர்.

இந்த பல்கலைக்கழகத்தில் படித்த முன்னாள் மாணவர்களான சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி டி.மதிவாணன், பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி, தொழில் அதிபர் முருகவேல் ஜானகிராமன் ஆகியோர் இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். சவுமியா அன்புமணி அவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த 1990-1992ஆம் ஆண்டுகளில் சமூகவியல் துறையில் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்.

அவர் தன்னுடைய கணவரான பாமக தலைவர் டாக்டர் அன்புமணியுடன் இணைந்து இந்த துறையின் மேம்பாட்டிற்காக ஏற்கனவே ரூ.20 லட்சம் நன்கொடை வழங்கி உள்ளார். இதற்காக அவரை துணைவேந்தர் கவுரி பாராட்டினார். இந்த விழாவில் பேசிய சவுமியா அன்புமணி, சென்னை பல்கலைக்கழகம் போலவே பல்வேறு கல்வி நிறுவனங்கள் சென்னையில் இருக்கின்றன.

இங்கு பள்ளிகள், மருத்துவமனைகள், போக்குவரத்து வசதிகள், வேலைவாய்ப்புகள் உள்பட பல்வேறு வசதிகள் இருப்பதை பெருஞ்செல்வமாக நாங்கள் கருதுகிறோம். ஆனால் கிராமப்புறங்களில் இருப்பவர்களுக்கு இதுபோன்ற வசதிகள் இன்னும் கிடைக்கவில்லை என்பது தான் உண்மை. அவர்களுக்கு இந்த வசதிகளை கொண்டு சேர்ப்பது தான் நம்முடைய கடமை மற்றும் பொறுப்பாக இருக்க வேண்டும் என்று சவுமியா அன்புமணி தெரிவித்துள்ளார். நகரங்களை போன்று கிராமப்புறங்களிலும் கல்வி வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் பேசினார்.

விழாவில் சென்னை பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்க இலச்சினையுடன் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது.

author avatar
Parthipan K