தேர்தல் ஆணையம் எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை!

0
72

தேர்தல் நடைபெறாத நேரத்தை பயன்படுத்தி தேர்தல்ஆணையம் தேர்தலுக்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்று புதிய தேர்தல் ஆணையர் சந்திர பாண்டே தெரிவித்திருக்கின்றார் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளின் காணொளி மாநாட்டை இந்திய தேர்தல் ஆணையம் நேற்றைய தினம் நடத்தி இருக்கின்றது.

செயல்திறன்மிக்க வாக்காளர்களுக்கு நட்பான சேவைகள் மற்றும் வாக்காளர் பட்டியலில் சரி பார்த்து தகவல் தொடர்பு செயலிகளில் ஒன்றிணைத்து விரிவான வாக்காளர் தொடர்பு திட்டம், ஊடகம் தகவல் தொடர்பு உத்தி செலவு கண்காணிப்பு சட்ட விஷயங்கள், வாக்கு இயந்திரம் மற்றும் விவிபாட் சேமிப்பு குறித்த உட்கட்டமைப்பு மற்றும் பயிற்சி திறன் அல்ல தன் மீது இந்த கூட்டத்தின்போது கவனம் செலுத்தப்பட்டது தெரிகிறது.

மாநில தலைமை தேர்தல் அதிகாரி கள் இடையே உரை நிகழ்த்திய தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா வாக்காளர்கள் தொடர்பான சேவைகளை விரைவாகவும் சிறப்பான முறையிலும் முன்னுரிமை அடிப்படையிலும் வழங்குவதற்கான பின்னணி அமைப்புகளுக்கு புது யுத்திகளை கொடுப்பதற்கும் இதுபோன்ற ஆய்வுக் கூட்டங்கள் அடிக்கடி நடத்தப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

வாக்களிப்பதற்கு வருகை தராத வாக்காளர்களுக்கான கைப்பேசி செயலிகள் குற்றச்செயல்கள் தடுப்பு மற்றும் தேர்தல் மற்றும் காவல் அலுவலர்களின் நியமனம் போன்றவற்றில் தாங்கள் பின்பற்றிய சிறந்த நடைமுறைகளை விரிவுபடுத்துதல் மற்றும் ஒருங்கிணைத்தல் காண வழிமுறைகள் தொடர்பாக அண்மையில் தேர்தல் நடைபெற்ற மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை சொல்ல வேண்டும் என்று தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கேட்டுக் கொண்டிருக்கின்றார்.

புதிதாக பொறுப்பேற்ற இருக்கின்ற தேர்தல் ஆணையர் சந்திர பாண்டே உரையாற்றும்போது மனிதவளம் உட்கட்டமைப்பு போன்றவற்றில் எடுக்கின்ற குறைகளை சரி செய்தல் மற்றும் தகவல் தொடர்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளைத் திட்டமிட்டு செயல்படுத்துதல், மாநிலங்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு பயிற்சி மற்றும் திறனை மேம்படுத்துதல் போன்றவற்றின் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார். இதற்காக தேர்தல் நடைபெறாத சமயத்தை தேர்தல் அதிகாரிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றார்.