இரண்டு இடங்களில் வாக்குரிமை உள்ளதா விரைவில் வருகிறது ஆப்பு! மத்திய அரசு புதிய சட்ட மசோதா நிறைவேற்றம்!

0
82

தேர்தல் என்று வந்துவிட்டால் அரசியல்வாதிகள் மட்டுமல்ல வாக்காளர்களும் தில்லுமுல்லு செய்வதில் பலே கில்லாடிகளாக இருக்கிறார்கள். இது பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது ஒரு வாக்காளருக்கு இரண்டு தொகுதிகளில் வாக்குரிமை இருப்பது, பெரும்பாலான இடங்களில் இருந்து வருகிறது இதனை தேர்தல் ஆணையம் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த ஒரு விஷயத்தை வைத்துக்கொண்டு வாக்காளர்கள் பலர் தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபடுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது.

அதாவது ஒரு வாக்காளர் ஒரு தொகுதியில் ஒரு வாக்கை செலுத்திவிட்டு மற்றொரு தொகுதியில் அவருக்கு வாக்கு உரிமை இருந்தால் அங்கே சென்று ஒரு வாக்கை செலுத்திவிட்டு வருவார். அதேபோல ஒரு தொகுதிக்குள் இரண்டு இடங்களில் வாக்களிக்கும் உரிமையும் பலருக்கு இருக்கிறது. இதே வேலையை அந்த வாக்காளர்களும் செய்து வருகிறார்கள்.

இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக ஒரே நபர் இரண்டு இடங்களில் வாக்காளர் அடையாள அட்டையை பெறுவதை தடுக்கும் விதத்தில் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை என்னை இணைக்க வழிவகை செய்யும் தேர்தல் சீர்திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது.

தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும், நடத்தும் விதத்தில் தேர்தல் சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பல பரிந்துரைகளை சட்ட ஆணையத்திற்கு அனுப்பி உள்ளது. மிக நீண்ட தினங்களாகவே நிலுவையில் இருந்து வரும் இந்த விவகாரம் தற்சமயம் அதில் ஒரு சில அம்சங்களுக்கு அனுமதி வழங்கும் சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை சார்பாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சட்ட மசோதா தேர்தல் ஆணையத்திற்கு சற்றே கூடுதலான அதிகாரத்தை வழங்க வழிவகை செய்கிறது அந்த மசோதாவில் இருக்கின்ற தேர்தல் சீர்திருத்தங்களின் முக்கிய அம்சங்கள் தற்சமயம் வெளியாகி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

அதன் அடிப்படையில் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை இணைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு கட்டாயமாக்க கூடாது அது தனி நபர் விருப்பத்திற்கு உட்பட்டது. இருந்தாலும் ஒரு நபர் இரு வேறு முகவரிகளில் வாக்காளர் அடையாள அட்டையை பெறுவதை தடுக்கும் விதத்தில் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை இணைப்பு செயல்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அதோடு ஒவ்வொரு வருடமும் ஜனவரி முதல் தேதியை மையமாகக்கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்களுடைய பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க இயலும். இனி வருடத்திற்கு 18 வயது பூர்த்தியான அவர்கள் தங்களுடைய பெயர்களை வாக்காளர் பட்டியலில் இணைப்பதற்கு ஆண்டில் நான்கு முறை வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. இது இளம் வாக்காளர்கள் வாக்களிக்க வழிவகை செய்யும் என்ற அடிப்படையில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதே போன்று தேர்தல் வாக்குப் பதிவுகள் பள்ளிகள் மற்றும் கல்லூரி கட்டிடங்களில் மட்டுமே நடந்து வருகிறது. ஆனால் இனி வரும் காலங்களில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் எந்த கட்டிடத்தையும் தங்களுடைய கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

திருமண மண்டபங்கள் வணிக வளாகங்கள் என்று எந்த ஒரு கட்டிடத்தையும் தேர்தல் ஆணையம் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம் என்று அந்த சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அங்கே தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்குவதற்கு இந்த சட்ட மசோதாவில் திருத்தம் கொண்டுவரப்பட உள்ளது. இந்த தேர்தல் சீர்திருத்த மசோதா நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்பட இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.