ஓபிஎஸ் போட்ட திடீர் குண்டு! அதிர்ச்சியில் அதிமுகவினர்!

0
72

ஆணுக்கு இரண்டரை வருடங்களும் பெண்ணிற்கு இரண்டரை வருடங்களும் ஆட்சியை வழங்க வேண்டும் என்று துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கின்றார்.

பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்காக கருத்தரங்கு நிகழ்ச்சி சென்னையில் நேற்றைய தினம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தமிழ்நாட்டில் இருக்கின்ற மகளிர் சுய உதவிக் குழுக்கள் அந்த பகுதிகளில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தட்டிக்கேட்கும் நீதிமன்றமாக செயல்படவேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருக்கின்றார்.

இதனைத் தொடர்ந்து பன்னீர்செல்வம் பேசியதுதான் பரபரப்பான தலைப்பாக மாறியது. ஒரு ஆட்சியில் ஐந்து வருடங்கள் பதவிக்காலம் இருக்கின்றன. அதில், முதல் இரண்டரை வருடங்கள் ஆணுக்கும், அடுத்த இரண்டரை வருடங்கள் பெண்களுக்கும், கொடுத்தால்தான் ஆணுக்குப் பெண் சமம் என்ற நிலை ஏற்படும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து நிற்பதற்கு அரசு அதிகாரிகள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

1991 ஆம் ஆண்டு முதல் முதலமைச்சர் பொறுப்பில் இருந்து வந்தவர் இரும்பு பெண்மணியான ஜெயலலிதா. அவர் சிறை செல்ல நேர்ந்த போது பன்னீர்செல்வத்தை தான் முதல்வர் நாற்காலியில் அமர வைத்து விட்டு சென்றார். அவருடைய மறைவுக்குப் பின்னர் சசிகலாவுடனான மோதல் காரணமாக தணி அணியை உருவாக்கினார் பன்னீர்செல்வம். அதன்பின்பு எடப்பாடி பழனிசாமி உடன் ஒன்றிணைந்து துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

சமீப காலத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் முதல்வர் வேட்பாளராக யார் இருக்க போகிறார்கள் என்று பன்னீர் செல்வத்திற்கும், பழனிச்சாமி க்கும், இடையே மோதல் உண்டானது. அந்த விவகாரத்தில் மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், போன்றவர்கள் தலையிட்டு சமாதானப்படுத்தி முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை அறிவித்தார்கள். தற்சமயம் சசிகலா ஜனவரி மாதத்தில் விடுதலையாகிறார் என்பது கிட்டத்திட்ட உறுதியாகிவிட்ட நிலையில், அவரை மனதில் வைத்தே பெண்களுக்கும் ஆட்சியில் சமபங்கு வேண்டும் என்று பன்னீர்செல்வம் தெரிவித்தாரா என்ற கேள்விகள் அதிமுகவினர் இடையே எழுந்திருக்கின்றது.

ஆனாலும் பெண்களை உற்சாகப்படுத்தும் விதமாக அவர்களுக்கு சம பங்கு கிடைக்க வேண்டும். என்ற அர்த்தத்திலேயே தான் பன்னீர்செல்வம் பேசியதாக தெரிவிக்கிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள். முன்னரே ரஜினிகாந்துடன் கூட்டணி அமைய வாய்ப்பு இருப்பதாக ஓ பன்னீர்செல்வம் தெரிவித்த நிலையில், அது அவருடைய தனிப்பட்ட கருத்து என முதல்வர் எடப்பாடி மறுப்பு தெரிவித்து விட்டார் இப்போது அடுத்து அதிமுக ஆட்சி அமைந்தாலும் கூட இரண்டரை வருடங்கள் எடப்பாடி ஆட்சி என்று சொல்லாமல் சொல்லி இருக்கின்றார் பன்னீர்செல்வம் இதன்காரணமாக அதிமுகவில் பரபரப்பு எழ தொடங்கியிருக்கின்றது