டிக்கெட் புக் பண்ணியிருந்தாலும் ரயிலில் சீட் கிடைக்காது!! காரணம் இதுதான்!!

0
36

டிக்கெட் புக் பண்ணியிருந்தாலும் ரயிலில் சீட் கிடைக்காது!! காரணம் இதுதான்!!

பெரும்பாலான இந்தியர்கள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். இங்கு ஏராளமான பொதுமக்கள் தங்கள் பயண நோக்கத்திற்கு ஏற்ப ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர்.

சாமானிய மக்கள் பெரிதும் ரயில் பயணத்தை மேற்கொள்கின்றனர் சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் படிப்பதற்காக வெளியூர் செல்பவர்கள் வேலைக்காக ஒரு இளைஞர்கள் மருத்துவத்திற்காக வரும் பொது மக்கள் என்று பலரும் ரயில் பயணத்தையே செய்து வருகின்றனர்.

இதனால் நமது ரயில்வே துறையும் பல்வேறு அறிவிப்புகளை மக்களுக்காக வெளியிட்டுக் கொண்டே வருகின்றது. இதன் மூலம் ஒவ்வொரு பயணிகளும் தங்கள் ரயில் பயண அனுபவத்தை பெற மற்றும் வசதியாக உள்ளதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று ரயில் உள்ள அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளது.

மேலும் எதிர்காலத்தில் எந்தவித பிரச்சனையும் வராமல் ரயில்வே துறையில் கூறியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ரயிலில் பயணம் செல்லும் பயணிகளுக்கு பல வசதிகளும் சலுகைகளும் செய்யப்பட்டு கொண்டுதான் வருகின்றது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் அதன் விதிமுறைகளைப் பற்றி நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. நமக்காக சிறப்பு சலுகையாக எவ்வளவு சலுகைகள் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?

முதலில் ரயிலில் பயணிக்கும் பொது மக்களுக்கு என்று பல அடிப்படை உரிமைகள் உள்ளது.

அந்த வகையில் தொலைதூரத்திலிருந்து வரும் பொதுமக்கள் யாராவது 12 அல்லது 15 மணி நேரம் டிராவல் செய்யப் போறார் என்றால் அவர்களை காலை முழுவதும் விட்டுவிட்டு இரவு 10 மணி ஆகிறது என்ற பட்சத்தில் வந்து டிக்கெட் செக் பண்ண அனுமதிக்க கூடாது.

TTE டிக்கெட் செக் பண்ண வேண்டும் என்றால் அவர்கள் ஏறிய சில மணி நேரத்தில் செய்ய இரவு 10 மணிக்கு மேல் டிக்கெட் செக் பண்ண கூடாது.

ஆனால் அதுவே உங்களுக்கு இரவு 9 மணிக்கு தான் பயணம் செய்யப் போகிறீர்கள் என்றால் அப்பொழுது TTE டிக்கெட் செக் பண்ணலாம்.

இப்பொழுது நான் சொன்ன தகவல்கள் அனைத்தும் தொலைதூரம் பயணம் செய்பவர்களுக்கு மட்டும்தான் இந்த ரூல்ஸ் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் ரயில் பயணம் செய்பவர்களுக்கு பொருந்தும்.

அதே போன்று ரயிலில் இரவு 10 மணியில் இருந்து மாலை ஆறு மணி வரைக்கும் தான் தூங்க வேண்டும் என்ற ரூல்ஸ் இருக்கின்றது.

ரயிலில் பயணம் செய்யப் போகிறீர்கள் என்றால் ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னரே நீங்கள் வந்து விட வேண்டும். அவ்வாறு வரவில்லை தாமதமாக வருகிறீர்கள் என்றால் ரயில் இரண்டு ஸ்டேஷனை தாண்டுவதற்குள் உங்கள் சீட்டில் நீங்கள் அமர்ந்திருக்க வேண்டும்.

அப்பொழுதும் நீங்கள் அமரவில்லை என்றால் நீங்கள் வரவில்லை என்று கருதி TTE உங்களது சீட்டை வேறொருவருக்கு மாற்ற அவருக்கு உரிமை உண்டு.

அப்படி நீங்கள் சரியான நேரத்திற்கு சென்ற போதும் உங்களது சீட்டில் வேறொருவர் அமர்ந்து இருக்கிறார்கள் என்றால் நீங்கள் உடனடியாக 139 என்ற எண்ணை அழைத்து புகார் செய்யவும்.

அப்படி செய்தும் எந்த உபயோகமும் இல்லை என்றால் அந்த ரயிலில் பயணிக்கும் TTE யிடம் கூறி ரயில்வே துறையில் புகார் தெரிவிக்கலாம்.

இப்படி நமக்கான பல சலுகைகளும் நாம் பின்பற்றக்கூடிய விதிமுறைகளும் ரயில் பயணத்தில் உள்ளது.

author avatar
Parthipan K