திமுகவுக்கு எதிராக திரும்பிய உதயநிதியின் எய்ம்ஸ் செங்கல் பிரச்சாரம்!

0
198
#image_title

எய்ம்ஸ் செங்கல் என்பதை வைத்து உதயநிதி ஸ்டாலின் அனைத்து தேர்தல்களிலும் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தாலும், அது திமுகவுக்கு எதிராகவே திரும்பி இருக்கிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கடந்த 2019 சட்டமன்ற தேர்தலின்போது நடந்த பிரச்சாரங்களில் உதயநிதி ஸ்டாலின் எடுத்துவைத்த விமர்சனம் தான் பெரிதளவில் பேசப்பட்டது. மதுரையில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என பாஜக வாக்குறுதி அளித்த நிலையில் அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை‌. இதனை மையமாக வைத்துதான் செங்கல் பிரச்சாரத்தை கையில் எடுத்தார் உதயநிதி.

இந்த பிரச்சாரம் திமுகவுக்கு பெரிய அளவில் கைகொடுத்தது. அதேசமயம் பாஜவும் எய்ம்ஸ் பற்றிய விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்திருந்தது.

2024 சட்டமன்றத் தேர்தலின் பிரசாத்தின் போதும் எய்ம்ஸ் அமைக்காதது குறித்து மத்திய அரசை விமர்சித்து வருகிறார். ஆனால் உதயநிதியை நோக்கி அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர்.

நீட் தேர்வை ரத்து செய்யும் போராட்டம் என்ன ஆனது? சொத்து வரி உயர்வு ஏன்? தகுதி உள்ள அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை ஏன் கிடைக்கவில்லை? என்று கேள்வி எழுப்புகின்றனர். முக்கியமாக விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், தமிழக விளையாட்டுத்துறையை என்ன மேம்படுத்தினார்? என்ற கேள்வியையும் முன்வைக்கின்றனர்.

செங்கலை மட்டுமே வைத்துக்கொண்டு ஊர் ஊராக பிரச்சாரம் செய்யாமல், மக்களின் குறைகளை தீர்க்குமாறும் சாடுகின்றனர்.

author avatar
Jeevitha