ஆன்லைனில் ஏமாந்த திருப்பதி பக்தர்கள்: கோடிக்கணக்கில் முறைகேடு நடந்ததாக புகார்

0
84

திருப்பதி தேவஸ்தானம் கோயிலுக்கு செல்பவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்வது முதல் நன்கொடை கொடுப்பது வரை ஆன்லைனில் செய்து வரும் நிலையில் போலியான இணைய தளங்களில் பல பக்தர்கள் பணத்தை கட்டி ஏமாந்து உள்ளதாகவும் இதில் கோடிக்கணக்கான பணம் முறைகேடாக மர்மநபர்கள் சம்பாதித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது

திருப்பதி தேவஸ்தானம் செல்லும் பக்தர்கள் இணையதளம் வழியாக தரிசன டிக்கெட் முன்பதிவு, வாடகைக்கு அறை எடுப்பது, நன்கொடை மற்றும் உண்டியல் காணிக்கை செலுத்துதல் ஆகியவைகளை ஆன்லைன் மூலமே செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சில மர்ம நபர்கள் திருப்பதி தேவஸ்தானம் பெயரில் போலியான இணையதளங்கள் ஆரம்பித்து அதன் மூலம் பக்தர்களை கவர்ந்து பணத்தை மோசடியாக பெற்று வருவதாக தெரிந்துள்ளது. இதனை சமீபத்தில் கண்டுபிடித்த திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் இது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றனர்

திருப்பதி தேவஸ்தானம் பெயரில் மொத்தம் 19 போலி இணையதளங்கள் இருப்பதாகவும் அதனை அடையாளம் கண்டு பொதுமக்கள் அதில் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தரிசன டிக்கெட் நன்கொடை உட்பட அனைத்து வங்கி நடைமுறைகளை கீழ்க்கண்ட மூன்று இணையத்தளங்களை மட்டுமே பக்தர்கள் தொடர்பு கொள்ள வேண்டுமென்றும் தேவஸ்தான அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். அந்த இணையதளங்கள் இவைதான்;

1.tirupatibalaji.ap.gov.in
2.ttdsevaonline.com
3.www.tirumala.org

author avatar
CineDesk