விஷால் – லிங்குசாமி உறவு பற்றி பதிவிட்டுள்ள பிரபல எழுத்தாளர்!!

0
62

விஷால் – லிங்குசாமி உறவு பற்றி பதிவிட்டுள்ள பிரபல எழுத்தாளர்!!

 

இயக்குநரும், எழுத்தாளரும் பிருந்தா சாரதி அவர்கள் நடிகர் விஷால் உடனான முக்கிய நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் பிருந்தா சாரதி அவர்கள் திரைப்பட இயக்குனர், வசனகர்த்தா, திரைக்கதை எழுத்தாளர் என பல பரிணாமங்களில் பயணித்து வருகிறார். லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த ஆனந்தம் திரைப்படத்தில் வசனம் எழுதி தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார். பிறகு லிங்குசாமியுடன் இணைந்து பையா ஔ வேட்டை உள்ளிட்ட சில படங்களில் பணியாற்றிவர் இவர் “தித்திக்குதே” என்ற படத்தையும் இயக்கினார்.

இந்நிலையில் நடிகர் விஷாலின் பிறந்தநாளான நேற்று, பிருந்தா சாரதி அவர்கள் அவர் இளமைக் காலத்து நிகழ்வுகளை நினைவுப்படுத்தி குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் பிருந்தா சாரதி அவர்களின் முகநூல் பதிவில், விஷாலை அவர் கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தே தெரியும். சரத்குமார் நடித்த ‘மகாபிரபு’ படத்தை விஷாலின் தந்தை தயாரித்தார். இயக்குனர் A. வெங்கடேஷ் இயக்கிய அப்படத்தில் நண்பர் லிங்குசாமி உதவி இயக்குநர். அந்த சமயத்தில் நான் நாசர் அவர்களின் அவதாரம் படத்தில் உதவி இயக்குனர். இருபடங்களும் விட்டு விட்டுப் படப்பிடிப்பு நடந்ததால் என்னைப் பார்க்க எங்கள் அலுவலகத்திற்கு லிங்குசாமி வந்து நாசர் சார் அவர்களுக்குப் பழக்கமானார். அவரைப் பார்க்கப் போய் விஷால் எனக்குப் பழக்கம் ஆனார். அப்போதே ‘நீ ஒரு ஹீரோ மெட்டீரியல்’ என்று நாங்கள் கூறியிருக்கிறோம். அதுதான் பின்னாளில் ‘சண்டக்கோழி’ திரைப்படத்திற்கு அடித்தளம் என்று குறிப்பிட்டுள்ளார்.

‘ஆனந்தம்’, ரன்’ , ‘ஜி’ ஆகிய படங்களில் மம்முட்டி, மாதவன், அஜித் என பெரிய ஹீரோக்களை வைத்து இயக்கிய லிங்குசாமி புதுமுகம் விஷாலை வைத்து இயக்க முன்வந்ததை உதவி இயக்குநர்கள் உட்படப் பலரும் மறுபரிசீலனை செய்யச் சொன்னார்கள். லிங்குசாமி ஒரே வார்த்தையில் பதில் அளித்தார். ‘விஷால் நாளைய பெரிய ஹீரோ ‘. சண்டக்கோழியின் வெற்றி அதை நிரூபித்தது. பத்து வருடங்களுக்கு முன் சொன்ன வார்த்தையை உண்மையாக்கினார் லிங்குசாமி.சண்டைக் காட்சிகளில் விஷாலின் வேகம் அசாத்தியமானது.

லிங்குசாமி மீது விஷால் வைத்திருக்கும் மதிப்பு நண்பன் என்பதையும் தாண்டியது. ‘என் வீட்டில் நான் பூஜை செய்யும் சாமிகளோடு லிங்குசாமியையும் வைத்திருக்கிறேன் ‘ என்று ஒரு பேட்டியில் கூறினார். அதேபோல் லிங்குவும், ‘விஷால் நீ இன்னும் கவனமாகப் படங்களைத் தேர்ந்தெடுத்தால் இப்போது அடைவதைவிட விடப் பத்து மடங்கு வெற்றியடைவாய்’ என்று கூறினார். தொடர் வெற்றி யாருக்கும் சாத்தியம் இல்லை என்றாலும் உயரம் நோக்கிச் சிறகுகள் விரிப்பதைப் பறவைகள் நிறுத்தாது, என்று இயக்குநர் பிருந்தா சாரதி அவர்கள் தன் நினைவுகளை பதிவிட்டுள்ளார்.

author avatar
Parthipan K