பிப்ரவரி 14 காதலர் தினம்! கொண்டாட வேண்டாம் வித்தியாசமான கோரிக்கையை திரும்ப பெற்ற அமைப்பு!  

0
136
#image_title

பிப்ரவரி 14 காதலர் தினம்! கொண்டாட வேண்டாம் வித்தியாசமான கோரிக்கையை திரும்ப பெற்ற அமைப்பு!  

பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தை விடுத்து பசுக்களை அணைக்கும் நாளாக கொண்டாடுங்கள் எனக்கு கோரிக்கை விடுத்த விலங்குகள் நல வாரியம் அதை திரும்ப பெற்றுள்ளது.

வருகின்ற பிப்ரவரி 14ஆம் தேதி உலகம் முழுவதும் வேலண்டைன்ஸ் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இது காதலர் தினமாக பல்வேறு நாடுகளிலும் இளஞ்ஜோடிகள் கொண்டாடி வருகின்றனர்.

காதலர் தினத்திற்கு இன்னும் சில நாட்களே  இருக்கும் நிலையில், இந்திய விலங்குகள் நல வாரியம் நாட்டு மக்களுக்கு ஒரு வித்தியாசமான வேண்டுகோளை விடுத்து உள்ளது. அதில், இந்த தினத்தில் நீங்கள் பசுக்களை அணைத்து கொண்டாடுங்கள். அப்படி நாம் செய்யும்போது, உணர்வுரீதியாக வளமும் மற்றும் கூட்டான மகிழ்ச்சியும் கிடைக்க பெறும். என கோரிக்கை விடுத்திருந்தது.

ஏற்கனவே காதலர் தினத்தை கொண்டாடுவதை குறித்து சில வலதுசாரி அமைப்புகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தன. காதலர் தினம் கொண்டாடப்படுவது கலாச்சார சீர்கேட்டுக்கு வழி வகுப்பதாகவும் அதனை தடை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் பிப்ரவரி 14-ம் தேதியை பசுக்களை அணைக்கும் நாளாக கொண்டாட வேண்டும் என விலங்குகள் நலவாரியம் அண்மையில் கோரிக்கை விடுத்தது. மேற்கத்திய கலாச்சாரத்தால் வேத கலாச்சாரம் அழிந்து வருவதால் நாட்டு மக்கள் இதனை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தது.

விலங்குகள் நல வாரியத்தின் இந்த அறிவிப்புக்கு வரவேற்பும் விமர்சனங்களும் எழுந்த நிலையில் கோரிக்கையை  திரும்பப் பெறுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.