தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி!!சுகாதாரத்துறை அமைச்சர் அதிரடி உத்தரவு!!

0
49
Financial assistance to pregnant women in Tamil Nadu!! Health Minister orders action!!
Financial assistance to pregnant women in Tamil Nadu!! Health Minister orders action!!

தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி!!சுகாதாரத்துறை அமைச்சர் அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் அரசு பல திட்டங்களை செய்து வருகின்றது. இதனால் பொதுமக்கள் மிகவும் பயனடைந்து வருகின்றனர்.

அதிலும் கர்ப்பிணி பெண்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றது.மேலும் தமிழக அரசு அவர்களுக்கு உதவி தொகை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை எழுப்பட்டு வந்த வந்தது.

இதனால் கர்ப்பிணி பெண்களுக்கு உதவும் வகையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித்திட்டம் என்ற பெயரில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த திட்டத்தால் குழந்தைகளின் இறப்பு சதவீதம் வெகுவாக குறைந்துள்ளது. மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு உதவும் வகையில் மாத்ரு வந்தனா யோஜனா என்ற பெயரில் மத்திய அரசால் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு மத்திய அரசானது ரூ.3000 என்ற தொகை வழங்கப்பட்டு வருகின்றது.இதனை தொடர்ந்து மாநில அரசு ரூ.2000 என்ற தொகை வழங்கி வருகின்றது.

இவ்வாறு கர்ப்பிணி பெண்களுக்கு மொத்தம் ரூ.5000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகின்றது.இதனால் ஏழை மக்கள் மிகவும் பயனடைந்து வருகின்றனர்.

இப்படி வழங்கப்படும் நிதி உதவி எதுவும் பெண்களுக்கு சென்றடைவதில்லை என்று தொடர்ந்து புகார் வந்து கொண்டே உள்ளது. இதனால் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பரமணியம் இது குறித்து தற்பொழுது விளக்கம் அளித்துள்ளார்.

இந்த நிலையில் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்க வேண்டிய தொகை நிலுவையில் உள்ளது என்றும் நிலுவையால் உள்ளதால் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்ட வில்லை என்றும் கூறினார்.

மேலும் அவர்களுக்கு வழங்குவதில் சிறிது காலதாமதம் மட்டுமே ஆகி இருப்பதாகவும் அவை அனைத்தும் விரைவில் சரி செய்யப்படும் என்று தெரிவித்த்துள்ளார்.

author avatar
Parthipan K