ஐந்து தலை நாகம் குடை பிடிக்க!.அருள்பாலிக்கும் திரிசூலநாதர்!!.

0
195

ஐந்து தலை நாகம் குடை பிடிக்க!.அருள்பாலிக்கும் திரிசூலநாதர்!!.

 

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திரிசூலம் என்னும் ஊரில் புகழ்பெற்ற அருள்மிகு திரிசூலநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 65 கி.மீ தொலைவில் திரிசூலம் என்னும் ஊர் ஒன்று உள்ளது. இந்த திரிசூலத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.மூலஸ்தானத்தில் மூலவரான திரிசூலநாதர், தேஜோ மயமாக காட்சி தரும் சிவலிங்க ஸ்வரூபம் எடுத்து, ஐந்து தலை நாகம் குடை பிடிக்க, கிழக்கு பார்த்து காட்சியளிக்கிறார்.இங்கு மூலவரின் சன்னதிக்குள், சிவன் அருகில் சொர்ணாம்பிகை இருக்கிறாள். மூலவரின் விமானம் கஜபிருஷ்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் சீனிவாசப்பெருமாளும் காட்சி தருகிறார். வைகுண்ட ஏகாதசியின்போது சீனிவாசர் முத்தங்கி சேவையில் காட்சி தருவார்.

சிவன் கோஷ்டத்திலுள்ள விநாயகர் நாக யக்ஞோபவீத கணபதி என்றழைக்கப்படுகிறார். இவர் இரண்டு முகங்களுடனும், முதல் இரு கைகளில் மான், மழு ஏந்தியும், மற்ற இரு கைகளில் நரசிம்மரை பிடித்த கோலத்திலும் உள்ளார்.இத்தகைய அமைப்பில் சரபேஸ்வரரை காண்பது அபூர்வம். மார்க்கண்டேஸ்வரர் பதினாறு பட்டை லிங்கம் ‘சோடச லிங்க வடிவில் காட்சி தருகிறார்.காசி விஸ்வநாதர், விசாலாட்சி, வள்ளி, தெய்வானையுடன் முருகன், ஐயப்பன், ஆதிசங்கரர் ஆகியோரின் சன்னதிகளும் அமைந்துள்ளது.திருக்கார்த்திகை, ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, பங்குனி உத்திரத்தன்று திருக்கல்யாணம் ஆகிய விழாக்கள் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.கல்வியில் சிறக்க திரிசூலநாதர் மற்றும் வீராசன தட்சிணாமூர்த்தியிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சுவாமிக்கு வஸ்திரம் சாற்றியும், விசேஷ அபிஷேகம் செய்தும் நேர்த்திக்கடனை செலுத்து வருகின்றனர்.

 

author avatar
Parthipan K