மாரடைப்பு வராமல் தடுக்க உதவும் உணவுகள்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

0
100

மாரடைப்பு வராமல் தடுக்க உதவும் உணவுகள்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

மாரடைப்பு வராமல் தடுக்கும் உணவு முறைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம்.அன்றாடம் வாழ்வில் மாறி வரக்கூடிய உணவு பழக்கவழக்கங்களின் காரணமாக இதயத்துக்கு தேவையான சத்துள்ள பொருட்கள் எடுத்துக் கொள்வதில்லை. இதன் காரணமாக மாரடைப்பு ஏற்படுகிறது.

கட்டுப்பாடற்ற உயர் ரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை போதிய உடற்பயிற்சி செய்யாததால் மாரடைப்பு ஏற்படுகிறது. இருதயம் ஆரோக்கியமாக இருக்கவும் மற்றும் ரத்த குழாயில் கொழுப்புகள் படியாமல் இருக்கவும் மற்றும் மாரடைப்பு வராமல் தடுக்கும் உணவுப் பொருட்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பச்சை காய்கறிகள்:நாம் அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவுகளுடன் பச்சை காய்கறியை எடுத்துக் கொள்வதன் மூலமாக மாரடைப்பு குறைகிறது. கீரைகள் மற்றும் பச்சை மிளகாய் மற்றும் முட்டைக்கோஸ் இவற்றில் அதிகம் வைட்டமின் ஏ, சி மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் உள்ளது.

கீரை வகைகளை எடுத்துக் கொண்டாலும் அதில் அதிகம் நார்ச்சத்து கொண்டிருக்கும் இவை தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றி ரத்த குழாய்களில் கொழுப்பு படியாமல் பாதுகாக்கிறது.

பெரிப் பழங்களான ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, கிராஸ்பெர்ரி, ஆகிய பழங்கள் இருதயத்துக்கு நன்மையை அளிக்க கூடியவை இதில் அதிக அளவு ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உள்ளது. ரத்தக்குழாய்களில் படியக்கூடிய கொழுப்புகளை நீக்கி ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது மற்றும் இதயம் சார்ந்த பிரச்சனைகள் வராமல் தடுக்கவும் சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.

நாம் சாப்பிடக்கூடிய உணவுகளுடன் மீன் அதிகம் எடுத்துக் கொள்வதன் மூலமாகவும் மாரடைப்பு வராமல் தடுக்கலாம்.மீனில் ஒமேகா 3 ஒமேகா 6 அதிக அளவு உள்ளது . இருதயத்தில் ரத்தக் குழாய்களில் அடைப்பு உண்டாக்கும் ட்ரைக் லிஸ்ட் என்னும் கெட்ட கொழுப்பினை அளித்து ஹச் டி எல் எனும் நல்ல கொழுப்புகளின் அளவை அதிகரிக்கிறது. இவ்விதமான உணவுகளை நாம் அதிகம் எடுத்துக் கொள்வதன் மூலமாக மாரடைப்பு இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் குணமடைகிறது.

author avatar
Parthipan K