நுரையீரலை பாதுகாக்கும் உணவு முறைகள்! கண்டிப்பாக நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

0
140

நுரையீரலை பாதுகாக்கும் உணவு முறைகள்! கண்டிப்பாக நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

நுரையீரலின் ஆற்றலையும் மற்றும் பலத்தையும் அதிகரிக்க கூடிய உணவுப்பொருட்களை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம்.

நம் உடல் உள்ள உறுப்பில் மிக முக்கியமான உறுப்பு நுரையீரல் தான். இதனை எந்த ஒரு நோய் தொற்று பாதிப்படையாதவாறு பாதுகாத்துக்கொள்ளும் உணவு முறைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

சுற்றுச்சூழல் மாசு காரணமாக நம் நுரையீரல் பாதிப்படுகிறது. காற்றில் இருக்கக்கூடிய வைரஸ் மற்றும் பாக்டீரியா கொண்டு தொற்று பிரச்சனைகள் தற்போது பெரும்பாலும் ஏற்படுகிறது. இதைத் தவிர புகைப்பிடித்தல் நம் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் நுரையீரலை பாதிப்படைய செய்து விடும். இதனை எவ்வாறு சரி செய்வது என்பதனை தெரிந்து கொள்வோம்.

நுரையீரலை பலப்படுத்தக்கூடிய உணவுகளில் முதல் இடத்தில் உள்ளது மஞ்சள் ஆகும். இதில் அதிகப்படியான ஆன்ட்டிபயாட்டிக் சத்துக்கள் உள்ளது மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளது. இதன் விளைவாக நுரையீரலில் ஏற்படும் வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளை நீக்க உதவுகிறது.

நுரையீரலை பலப்படுத்துவதற்கு இஞ்சியில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளது. நுரையீரலில் படிந்துள்ள சளியை கரைத்து வெளியேற்ற மிகவும் உதவுகிறது.

இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால் என்கின்ற சத்து நுரையீரலில் இருக்கும் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி சுவாச பாதையை சுத்தம் செய்ய மற்றும் சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.

காலையில் சிறிதளவு வெதுவெதுப்பான நீரில் இஞ்சி கலந்து குடித்து வர நுரையீரல் பலம் பெறும். நோய்களிடமிருந்து பாதுகாக்கும். நுரையீரலை பாதுகாக்க பூண்டில் அதிகப்படியான அழுசின் என்கின்ற சத்து உள்ளது.இதை நுரையீரலில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து எவ்வித தொற்றும் ஏற்படாத வண்ணம் பாதுகாத்து கொள்கிறது.

author avatar
Parthipan K