கால் வலியா?அப்போ இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!!

0
107
Foot pain? Then follow these tips!!
Foot pain? Then follow these tips!!

கால் வலியா?அப்போ இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!!

இன்றைய சூழ்நிலையில் நாம் நிறைய பேருக்கு கால் வலி மற்றும் குதிகால் வலி இருப்பதை பார்த்திருப்போம். சில பேருக்கு லேசான வலியும் சில பேருக்கு கடுமையான எரிச்சல் தரக்கூடிய வலியும் ஏற்படும். இது நமக்கு நிற்கும் திறன் மற்றும் நடக்கும் திறனை பாதிக்கலாம். பெரும்பாலும் குளிர்காலங்களில் அதிக கால் வலி வருவதாக மக்களால் கூறப்படுகிறது. கால் வலி எவ்வாறு ஏற்படுகிறது? அதை எப்படி வீட்டிலேயே எளிய முறையில் சரி செய்யலாம் என்பதையும் பார்ப்போம்.

கால் வலி வருவதற்கான காரணங்கள்:
1. மூட்டுகள் ,எலும்புகள் தசை நாண்கள் தசைகள், தசை கோளங்கள் அல்லது மென்மையான திசுக்கள் முதலியவற்றில் ஏற்படும் காயங்கள்.

2. பெரும்பாலான கால் வலி மூட்டு வலி மற்றும் எலும்பு தேய்மானம் போன்றவற்றால் ஏற்படலாம். இந்த நாள் காலில் வலி மற்றும் அசகௌரியம் ஏற்படலாம்.

3. ரத்தத்தில் சோடியம் பொட்டாசியம், விட்டமின் டி, மெக்னீசியம் குறைபாடு.

4.தசைகளின் சோர்வு, மற்றும் மற்றும் நெகிழ்வுத் தன்மை இல்லாமை.

நாம் மோசமான கால் வலியை அனுபவித்து இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது ஆரம்பத்தில் நோயை கண்டறிந்தால் அதன் சிகிச்சை முறைகளும் எளிமையாக ஆகும். கூடிய விரைவில் கால் வலியையும் தவிர்க்கலாம். விளைவுகள் மோசமாவதையும் தவிர்க்க முடியும்.

குளிர்காலத்தில் கால் வலி அல்லது மூட்டு வலி பொதுவானது. பெரும்பாலும் இது நின்று கொண்டே அல்லது உட்கார்ந்து கொண்டே வேலை செய்பவர்களுக்கு ஏற்படுகிறது. வயதானவர்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது. இதற்கு முதல் காரணமாக சொல்லப்படுவது குளிர் காலத்தில் நம்முடைய வேலைகள் இயல்பை விட குறைவாக இருப்பது. மற்றொரு முக்கிய காரணியாக சொல்லப்படுவது நமது தோலில் விட்டமின் டி- யை உட்கிரகிக்கும் சூரிய ஒளி தோலில் படாமல் இருப்பது.

கால் வலியை சரி செய்வதற்கான எளிய உணவு பட்டியலை பார்ப்போம்.

வைட்டமின் டி மற்றும் சி ஒமேகா, கொழுப்பு அமிலங்கள், இஞ்சி, சோயாபீன்ஸ் பச்சை காய்கறிகள், விதைகள் மற்றும் கொலாஜன் சப்ளிமென்ட்ஸ் மூட்டு வலி மற்றும் கால் வலி வருவதற்கான மூட்டு எலும்பு தேய்மானத்தின் காரணத்தை குறைக்கும். மூட்டு மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

மேலும் கால் வலியை குறைப்பதற்கு உடல் எடையை குறைப்பதும் ஒரு முக்கியமான வழியாகும். உடல் பருமனும் கால்வலிக்கான முக்கிய காரணிகளில் ஒன்று சரியான அளவில் சரியான உடல் எடையை பெற்று இருப்பது கால் வலி வருவதற்கான சாத்தியக்கூறுகளை குறைக்கும்.

உடற்பயிற்சி மற்றும் நடை பயிற்சி செய்து விட்டு வந்ததும் தசைகளுக்கு சற்று மசாஜ் கொடுப்பதும் நல்லது. இது தசை தளர்வுக்கு வழிவகுப்பதோடு உடற்பயிற்சி வலியையும் குறைக்கும்.

கால் பிடிப்புகளுக்கு காரணம் தசைகளில் சுருக்கம் ஏற்படுவது ஆகும். இதற்கான முக்கிய காரணமாக சொல்லப்படுவது நமது உடலில் நீர்ச்சத்துக் குறைவதே! நாம் எப்போதும் நீரேற்றத்துடன் இருக்கும்பொழுது நமக்கு கால் பிடிப்பு மற்றும் தசைப் பிடிப்பு ஏற்படாது. போதுமான நீரேற்றம் நம் உடலில் இருக்கும் பொழுது தசைகள் ஓய்வு எடுக்கலாம். அவ்வாறு இல்லாமல் நமது உடல் நீரினை இழக்கும் பொழுது தசைகள் கிளர்ச்சி அடைந்து சுருங்கி கால் பிடிப்பு ஏற்படலாம். போதுமான அளவு நீர் அருந்துவது அத்தியாவசியமான தேவையாகிறது.

தசைப்பிடிப்பை குறைக்க நாம் குளிர் மற்றும் சூடான அழுத்தத்தை பயன்படுத்தலாம். இது தசைப்பிடிப்பு வீக்கம் மற்றும் வலிகளை குறைக்கிறது. சூடான அழுத்தமானது சோர்வுற்ற தசைகளை மீட்டெடுக்க உதவும். போராட்ட தசைகளை சரிசெய்ய கால்களை அடிக்கடிக்கு நீட்டி மடக்கவும். இதனால் தசைகளுக்கு நெகிழ்வு ஏற்பட்டு உங்கள் கால் வலியை குறைக்கலாம்.