இந்திய அணியை சீண்டிய முன்னாள் பாக். கிரிக்கெட் தலைவர் : பேட்டிங்கில் வெளுத்து வாங்கிய ரோஹித், கோலி!

0
34
#image_title

இந்திய அணியை சீண்டிய முன்னாள் பாக். கிரிக்கெட் தலைவர் : பேட்டிங்கில் வெளுத்து வாங்கிய ரோஹித், கோலி!

தற்போது ஆசிய கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. நேற்று இலங்கையில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டியில் நேருக்கு மோதியது. விறுவிறுப்பாக நடந்துக் கொண்டிருந்த இப்போட்டியில் மழை குறுக்கிட்டு, ஆட்டம் ரிசர்வ் நாளான இன்று மாற்றியது. இதனால், பிரேமதேச மைதானத்தில் ரசிகர்களே இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

ஆனால், இன்று நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் மழைக்கு நடுவே பாகிஸ்தான் அணியை ஆட்டம் காட்டிவிட்டனர் இந்திய அணியின் பேட்டிங் வீரர்கள். இந்த அளவிற்கு ஆக்ரோஷமாக ஆடுவதற்கு ஒரு சம்பவம் இருந்ததாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளார்.

2023 ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி முதலில் பாகிஸ்தானுக்கு சென்று ஆட மறுத்தது. இதனால் போட்டிகள் இலங்கைக்கு மாற்றப்பட்டன. ஆனால், மழையால் பல போட்டிகள் தடைப்பட்டது. இதற்கு பாகின்தான் கிரிக்கெட் அமைப்பு ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் நஷ்ட ஈடு கேட்டது.

மேலும், முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் தலைவர் நஜாம் சேதி சமூகவலைத்தளங்களில் ஜெய் ஷாவை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்.

போட்டிகள் மழை காரணமாக பாதிக்கப்படுவதால், கொழும்பிலிருந்து  வேறு மைதானத்துக்கு போட்டிகள் மாற்ற வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. இதை  நஜாம் சேதி பேசுகையில், ஜெய் ஷா பின்வாங்கிவிட்டார். பாகிஸ்தானை சந்திக்க இந்திய அணி அஞ்சுகிறது. தோல்வி அடைந்து விடுவோமோ என்று நினைக்கிறார்கள். அதனால்தான் இப்படி செய்கிறீர்களா? என்று கேள்வி கேட்டு பேசினார்.

இவரின் பேச்சு இந்திய வீரர்களுக்கு கோபத்தை ஏற்படுத்திவிட்டதுபோல, குரூப் போட்டியில் தடுமாறிய இந்திய பேட்டிங், இப்போட்டியில் பாகிஸ்தான் அணியை ஓட, ஓட வெளுத்துவாங்கிவிட்டது. இந்த உத்வேகத்திற்கு காரணம்  நஜாம் சேதிதான் என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

author avatar
Gayathri