“கேப்டன் ரோஹித் ஷர்மாவோடு பேசினேன்…” பிசிசிஐ தலைவர் கங்குலி கருத்து

0
72

“கேப்டன் ரோஹித் ஷர்மாவோடு பேசினேன்…” பிசிசிஐ தலைவர் கங்குலி கருத்து

இந்திய அணி சொதப்பல்கள் குறித்து கேப்டன் மற்றும் பயிற்சியாளர் ஆகியோரோடு பேசினேன் என பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியுள்ளார்.

இந்திய அணிக்கு இந்த ஆண்டில் இருந்து அனைத்து விதமான போட்டிகளிலும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் ரோஹித் ஷர்மா. இந்நிலையில் இப்போது அவர் தலைமையில் டி 20 போட்டிகளில் இந்திய அணி தோல்வியை சந்தித்து வருகிறது. இதனால் அவர் மேல் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதே போலதான் சென்ற ஆண்டு டி 20 உலகக்கோப்பை தொடரிலும் இந்திய அணி சொதப்பி தோல்வி அடைந்தது. இதுபோல முக்கியமான போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைவது சமீபகாலமாக வாடிக்கையாகியுள்ளது. இதனால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் பயிற்சியாளர் டிராவிட் ஆகியோர் மீது அழுத்தம் அதிகமாகியுள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ தலைவரும் முன்னாள் இந்திய அணியின் கேப்டனுமான சவுரவ் கங்குலி “ஆசியக் கோப்பை மற்றும் டி 20 உலகக்கோப்பையிலும் இந்திய அணியின் சொதப்பல் உண்மைதான். இதுகுறித்து நான் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் ஆகியோரிடம் பேசினேன். அவர்களும் இதே கவலையில்தான் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அதனால் இனிமேல் அந்த பிரச்சனை தீர்ந்துவிடும் என நினைக்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.

சமீபத்தில்தான் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட டிராவிட் தன்னுடைட ஹனிமூன் காலத்தைக் கடந்துவிட்டார் என்றும், இனிமேல் அவருக்குக் கடினமான காலம் என்றும்  பல முன்னாள் வீரர்களும் பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.