செரிமானக் கோளாறு மற்றும் வாயு தொல்லையை சரி செய்ய உதவும் பூண்டு ரசம்!!

0
34
Garlic juice helps to cure indigestion and flatulence!!
Garlic juice helps to cure indigestion and flatulence!!

செரிமானக் கோளாறு மற்றும் வாயு தொல்லையை சரி செய்ய உதவும் பூண்டு ரசம்!!

நவீன கால வாழ்க்கை என்பது ஆரோக்கியமற்ற உணவு பழக்கத்தால் நகர்ந்து கொண்டிருக்கிறது.இதனால் நாம் உடல் சார்ந்த பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறோம்.ஹோட்டல் உணவுகளால் (துரித உணவு) மலச்சிக்கல்,குடல் வீக்கம்,செரிமான பிரச்சனை உள்ளிட்டவைகளை நாம் சந்தித்து வருகிறோம்.

அதேபோல் வாயு பிரச்சனை என்பது தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கிறது.இதனால் மன உளைச்சல்,மன அழுத்தம் உள்ளிட்டவை ஏற்பட தொடங்கி விடுகிறது.இதனை சரி செய்ய பூண்டு உபயோகித்து ரசம் செய்து சாப்பிடுங்கள்.பூண்டு செரிமான கோளாறுக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது.இதனால் செரிமானக் கோளாறு பாதிப்பு சரியாகி வாயு தொல்லையை நீக்குகிறது.

தேவையான பொருட்கள்:-

*பூண்டு – 10 பற்கள்

*மிளகாய் வற்றல் – 2

*மிளகு – 2 தேக்கரண்டி

*சீரகம் – 1 தேக்கரண்டி

*கறிவேப்பிலை – 2 கொத்து

*எண்ணெய் – 1 தேக்கரண்டி

*தக்காளி – 1

*பெருங்காயத் தூள் – 1 ஸ்பூன்

*உப்பு – தேவையான அளவு

*புளி – 1 எலுமிச்சம் பழ அளவு

*கடுகு – 1/4 தேக்கரண்டி

*கொத்தமல்லி இலை – சிறிதளவு

செய்முறை:-

ஒரு பாத்திரம் எடுத்து அதில் 1 எலுமிச்சம் அளவு புளி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊற விடவும்.

ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் 10 பல் பூண்டு,2 வர மிளகாய் மிளகாய்,2 தேக்கரண்டி மிளகு,1 தேக்கரண்டி சீரகம்,1 கொத்து கறிவேப்பிலை சேர்த்து அரைத்து கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.
அவை சூடேறியதும் அதில்1 தேக்கரண்டி கடுகு சேர்த்து பொரிய விடவும்.பின்னர் நறுக்கி வைத்துள்ள தக்காளி,1 கொத்து கறிவேப்பிலை,1 தேக்கரண்டி பெருங்காய தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.

பின்னர் அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு வதக்கவும்.அடுத்து ஊறவைத்துள்ள புளி கரைசலை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.

பின்னர் ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைக்கவும்.வாசனைக்காக சிறிதளவு கொத்தமல்லி இலைகளை சேர்த்து கொள்ளவும்.பூண்டு ரசம் இவ்வாறு செய்து சாப்பிடுவதன் மூலம் செரிமானக் கோளாறு,வாயு தொல்லை விரைவில் குணமாகும்.