எனக்கு சாதிவெறி கிடையாது… பெயர் சர்ச்சைக்கு பதிலளித்த இயக்குனர் கௌதம் மேனன்!

0
102

எனக்கு சாதிவெறி கிடையாது… பெயர் சர்ச்சைக்கு பதிலளித்த இயக்குனர் கௌதம் மேனன்!

இயக்குனர் கௌதம் மேனனுக்கும் சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறனுக்கும் இடையில் கடந்த வாரங்களில் கருத்து மோதல் எழுந்துள்ளது.

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய வெந்து தணிந்தது காடு திரைப்படம் கடந்த 15 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த படத்தை விமர்சனம் செய்த ப்ளு சட்ட மாறன் வழக்கமாக தன் பாணியில் காட்டமாகவும் கேலியாகவும் விமர்சனம் செய்ய அந்த வீடியோ வைரல் ஆனது.

இந்த விமர்சனங்களால் பாதிக்கப்பட்ட இயக்குனர் கௌதம் மேனன், தான் அளித்த ஒரு நேர்காணலில் “அவரைப் பற்றி பேசினால் எல்லோரும் ஒதுங்கி போகிறார்கள். என்னால் அப்படி இருக்க முடியவில்லை. இறங்கி ஏதாவது அவர செய்யணும் போல இருக்கு” எனக் கோபத்தை வெளிபடுத்தினார்.

இதனால் சீண்டப்பட்ட மாறன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ““சாதிப்பெயரை பின்னால் போட்டுக்கொள்வதை விரும்பாத தமிழகத்தில்..சாதிய அடையாளத்தை பெருமையாக கருதும் ஒரே இயக்குனர். கௌதம் வாசுதேவ்..மேனன்.” என்று பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் சாதிப்பெயரை பின்னால் போட்டுக்கொள்வது பற்றி இயக்குனர் கௌதம் மேனன் இப்போது விளக்கம் அளித்துள்ளார். அதில் “எனக்கு பிறந்தவுடன் வைக்கப்பட்ட பெயர்தான் ‘கௌதம் வாசுதேவ் மேனன்’. எனது எல்லா ஆவணங்களிலும் அந்த பெயர்தான் உள்ளது. அதனால் எனக்கு சாதிவெறியெல்லாம் கிடையாது. என் முதல் சில படங்களில் தயாரிப்பாளர்களின் வற்புறுத்தலால் கௌதம் என்ற பெயரை பயன்படுத்தினேன். பின்னர் வாரணம் ஆயிரம் படத்துக்குப் பிறகு கௌதம் வாசுதேவ் மேனன் என்ற பெயரை பயன்படுத்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.