அரசு குழந்தைகள் மருத்துவமனையில் தவறான சிகிச்சை!! 8 ஆண்டுகளாக இடது கை கால் செயலிழந்து தவிக்கும் சிறுமி!!

0
127
Mistreatment at Govt Children's Hospital!! A girl suffering from paralysis of her left arm and leg for 8 years!!
Mistreatment at Govt Children's Hospital!! A girl suffering from paralysis of her left arm and leg for 8 years!!

அரசு குழந்தைகள் மருத்துவமனையில் தவறான சிகிச்சை!! 8 ஆண்டுகளாக இடது கை கால் செயலிழந்து தவிக்கும் சிறுமி!!

தவறான சிகிச்சையளித்த மருத்துவர்களிடம் உரிய விசாரணை நடத்திட தலைமை காவலர் கோவிந்தன் வேண்டுகோள்.

தவறான சிகிச்சை காரணமாக இடது கை கால் செயலிழந்து குழந்தையின் வாழ்க்கை முடங்கியதால் பெற்றோர்கள் வேதனை.

சென்னையை அடுத்த ஆவடியை சேர்ந்த கோவிந்தன் ஓட்டேரி சட்டம் ஒழுங்கு பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் திருத்தனி அரசு மருத்துவமனையில் பிரத்திக்சா என்ற பெண் குழந்தை பிறந்தது. பிறந்த 3 வயது வரை எந்த பிரச்சினையும் தெரியவில்லை.

3 வயதை எட்டும் பொழுது குழந்தையின் உடலில் நெப்ராட்டிக் சின்ட்ரோம் என்ற உப்பு அளவு அதிகமாக ணுரக்கும் நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் குழந்தையின் உடல் பருமன் அதிகரித்தும், சிறுநீர் கழிப்பதில் சிக்கலும் ஏற்பட்டது.

இதனால் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. அப்பொழுது குழந்தைக்கு SRNS என்ற மருந்து வழங்கப்பட்டது. அதனால் உடலில் உள்ள புரத சத்துக்கள் வெளியேற துவங்கியது.

இதனால் கிட்ணி மற்றும் எழும்புகளில் சுரக்கும் தேவையான சுரபிகள் சுரப்பதற்கு தேவையான மருந்துகள் வழங்கப்பட்டது. 3 வயது முதல் 5 வயது வரை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் கால்சியம் மருந்துகள் 2 ஆண்டுகள் வழங்கப்பட்டது.

பின்னர் கொரோனா காலம் துவங்கியதால், மல்ட்டி விட்டமின் மருந்துகளும், பிபி மாத்திரைகளும் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பெட்ரோசோனல் என்ற மருந்து வழங்கப்படுகிறது. அதனால் 8வயதில் காலில் அறிப்பு தன்மை ஏற்பட்டு, காலுக்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிப்பு ஏற்பட்டு ரத்தம் கெட்டுப்போகிது.

இதனால் இடது கால் கருகிய நிலைக்கு செல்கிறது. இதற்கான காரணங்கள் பெற்றோர் தரப்பில் கேட்னும் உரிய பதிலோ விளக்கமோ மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் வழங்கப்படவில்லை.

பின்னர் குழந்தைக்கு டயாலிசிஸ் செய்யப்படுகிறது. இதனால் நரம்பியல் தொடர்பான வலிப்பு நோய் ஏற்படுகிறது. அதற்கான சிகிச்சைகளும் மருத்துவர்களாக,ல் வழங்கப்பட்டது. பின்னர், 2021 டிசம்பர் 26ம் தேதி வீடு திரும்பியது. வீட்டிற்கு வந்த சில நிமிடங்களிலேயே வலிப்பு ஏற்பட அன்றைய தினமே மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறது.

அப்பொழுது, வெண்டிலேட்டருக்கு செல்கிறது குழந்தை. மேலும், பரிசோதனை செய்யப்படுகிறது. அப்பொழுது, மூளைக்காச்சல் இருப்பதற்கான அறிகுறிகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்க, அதற்கான சிகிச்சைகளும் வழங்கப்பட்டது. அதனால், குழந்தையின், இடது கால் மற்றும் கை செயலிழக்கிறது. இதற்கு, இனாக்ஸ்பெரின் என்ற ஊசி காலை மாலை என இரண்டு வேலைகள் செலுத்தப்படுபிறது.

பின்னர் மருத்துவர்கள் காலை அகற்றுவதற்கு பரிந்துரைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கும் பொழுது குழந்தை 26 கிலோ இருந்த நிலையில் 14 கிலோவுக்கு எடை குறைந்தது. சுயநினைவு இல்லாத நிலைக்கு குழந்தை சென்றதால், பெற்றோர், ஹோமியோபதி சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்.

அதில் சிறு முன்னேற்றம் இருந்தாலும், மீண்டும் பழைய நிஙைக்கே குழந்தை சென்றது. இதனால் குழந்தையை கருணை கொரை செய்ய வலியுறுத்நி மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது.

மேலும் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் குழந்தை பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கேஇடம் உரிய விசாரணை நடத்திட வேண்டும் என முதல்வர் தனிப்பிரிவில் 3 முறையும், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் 2 முறையம் மனு அளித்துள்ளனர். ஆனாலும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

பின்னர், டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலால் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டது. அப்பொழுது, கை கால் செயல்படுவதற்கான சிகிச்சைகள், கிட்ணி சரிசெய்வதற்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டது. இதனால் குழந்தையின் உடல் நலம் லேசான முன்னேற்றம் அடைந்துள்ளது.

இதன் காரணமாக, தமிழக அரசு எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் தனது குழந்தைக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களிடம் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என முதல்வரை மீண்டும் வலியுறுத்துகிறார்.

இதனால் தனது மகளுக்கு தவறான சிகிச்சையளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா அரசு என்ற எதிர்பார்ப்புடன் வேதனையுடன் காத்திருக்கிறார் தலைமை காவலர் கோவிந்தன் மற்றும் குழந்தை பிரத்திக்சா.

குழந்தைக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் முன்னாள் இயக்குனர் எழிலரசியிடம் கேட்டபோது விசாரணை தொடர்பாக குழு அமைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.

author avatar
Savitha