பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இன்ப செய்தி! அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

0
62

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இன்ப செய்தி! அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்ததை அடுத்து  மாணவர்களின் நலன் கருதி, கடந்த செப்டம்பர் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனை தொடர்ந்து, கடந்த நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில் ஏற்கனவே அறிவித்திருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், அடுத்த கட்ட கட்டுப்பாடுகள் குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் பள்ளிகளில் 1 முதல் 9-வது வரையிலான வகுப்புகளுக்கு வரும் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

1 முதல் 9-வது  வரையிலான வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தாலும் மாணவர்களின் படிப்பின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஆன்லைன் மற்றும் கல்வித்தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுத்தேர்வு நடைபெற இருக்கும் 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு விடுமுறை கிடையாது எனவும் அந்த வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளுக்கும் வரும் 31-ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுவதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அந்த வகையில் அனைத்து பிஇ, கலை-அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரி இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு 31-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மருத்துவக்கல்லூரி, கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K