பொதுமக்களுக்கு குட் நியூஸ் !அரசு பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தல் அபராதம்!

0
73

பொதுமக்களுக்கு குட் நியூஸ் !அரசு பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தல் அபராதம்!

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அடுத்த தேவனூர் புது நகரைச் சேர்ந்தவர் கருணா. இவர் 2020 ஜனவரி 20ஆம் தேதி இரவு விளம்பரத்தில் இருந்து திருக்கோவிலூர் செல்ல டி.என்.32, என்.3295 என்று சாதாரண கட்டண அரசு  பஸ்சில் சென்றார். விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலூருக்கு 25 ரூபாய் கட்டணம். ஆனால் கர்ணாவிடம் 35 ரூபாய் கட்டணத்தை கண்டக்டர் வசூலித்தார்.

இது குறித்து விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றத்தில் கருணா வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் சதீஷ்குமார் தலைமையில் உறுப்பினர்கள் மீரா மொய்தீன், அமலா ஆகியோர் முன்னிலையில் விசாரணை நடந்தது. அதில் அரசு பஸ் கண்டக்டர் கணேஷ் திருக்கோவிலூர் போக்குவரத்து கழக கிளை மேலாளர் மற்றும் விழுப்புரம் மண்டல மேலாண்மை இயக்குனர் எதிர் தரப்பினர்களாக சேர்க்கப்பட்டன.

நியாயமற்ற, வர்த்தக நடைமுறையின் படி முறையீட்டாளரிடமிருந்து அதிகமாக பெற்ற கட்டிடத் தொகையை ரூ 7 மற்றும் அதற்கு அன்றைய தேதியில் இருந்து 12 சதவீத வட்டியுடன் திருப்பி அளிக்க வேண்டும். மேலும் முறையீட்டாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சல், மனவேதனை,அலைசலுக்கு இழப்பீடாக 25 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு மற்றும் வழக்கு செலவு தொகையாக 5000 ரூபாயை சேர்த்து வழங்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்ற தீர்ப்பளித்துள்ளது.

author avatar
CineDesk