அலார்ட்! பேய் மழையை சந்திக்கப்போகும் தமிழகம்!

0
54

தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனையொட்டிய இருக்கின்ற மாவட்டங்கள் அதோடு கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்க்கான வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.மற்ற மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் போன்ற இடங்களில் வரண்ட வானிலைதான் காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், நாளைய தினம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற மாவட்டங்களான கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. அதோடு மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் போன்ற இடங்களில் வறண்ட வானிலை தான் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வடதமிழ்நாட்டில் தரைக் காற்று பலமாக வீசும் இடையிடையே சூரை காற்றும் வீசும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல நாளை மறுநாள் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கிற மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் போன்ற இடங்களில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே காணப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. சென்னையை பொருத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.