டிசம்பர் 15ம் தேதி முதல் சென்னையில் கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டி! பரிசுத் தொகை இவ்வளவு லட்சமா! 

0
161
#image_title
டிசம்பர் 15ம் தேதி முதல் சென்னையில் கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டி! பரிசுத் தொகை இவ்வளவு லட்சமா!
வரும் டிசம்பர் 15ம் தேதி முதல் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நடைபெறவுள்ளதாக தற்பொழுது தகவல் வெளியாகி இருக்கின்றது.
சென்னையில் நடைபெறவுள்ள சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் வரும் டிசம்பர் மாதம் 15ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக இந்த சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நடைபெறவுள்ளது.
டிசம்பர் 15ம் தேதி தொடங்கும் இந்த சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் 8 சர்வதேச மற்றும் இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இவர்கள் 7 ரவுண்ட் ராபின் கொண்ட கிளாசிக் பெட்டிகளில் விளையாடவுள்ளனர்.
இந்த பெட்டியில் கலந்து கொள்ளவுள்ள செஸ் மாஸ்டர்களின் சராசரி எலோ ரேட்டிங் 2711ஆக இருக்கின்றது. இந்த சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டர்களான 2727 எலோ ரேட்டிங் கொண்ட அர்ஜூன் எரிகைசி, 2720 எலோ ரேட்டிங் கொண்ட டி.குகேஸ், 2696 எலோ ரேட்டிங் கொண்ட பி.ஹரிகிருஷ்ணா ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும் சர்வதேச அளவில் ஈரானை சேர்ந்த 2742 எலோ ரேட்டிங் கொண்ட பர்ஹாம் மக்சூட்லூ, அமெரிக்காவை சேர்ந்த 2723 எலோ ரேட்டிங் கொண்ட லெவோன் அரோனியன், ஹங்கேரியை சேர்ந்த 2703 எலோ ரேட்டிங் கொண்ட சனார் சுகிரோவ், உக்ரைனை சேர்ந்த 2691 எலோ ரேட்டிங் கொண்ட பாவெல் எல்ஜனோவ், செர்பியாவை சேர்ந்த 2689 எலோ ரேட்டிங் கொண்ட அலெக்சாண்டர் ப்ரெட்கே ஆகியோரும் என மொத்தம் 8 பேர் கலந்து கொள்கின்றனர்.
சென்னையில் நடைபெறும் இந்த சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியானது இந்திய கிராண்ட் மாஸ்டர்களான டி.குகேஷ் மற்றும் அர்ஜூன் எரிகைசி ஆகிய இருவருக்கும் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கப் போகின்றது.
சராசரியாக 2700 எலோ ரேட்டிங் கொண்ட கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி இந்தியாவில் முதன் முறையாக நடக்கப் போகின்றது. இந்தியாவில் முதன் முறையாக  அதுவும் சென்னையில் நடைபெறும் இந்த கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், தமிழக அரசும் இணைந்து நடத்தவுள்ளது.
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் பேட்டியின் மெத்த பரிசுத் தகை 50 லட்சம் ரூபாய் ஆகும். இந்த போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெறும் கிராண்ட் மாஸ்டருக்கு 15 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக  வழங்கப்படும். இரண்டாவது இடம் பிடிக்கும் கிராண்ட் மாஸ்டருக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
அதே போலீஸ் மூன்றாவது இடம் பிடிக்கும் கிராண்ட் மாஸ்டருக்கு 8 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும். மீதம் உள்ள 4வது இடம் பிடிப்பவருக்கு 5 லட்சமும்,  5வது இடம் பிடிப்பவருக்கு 4 லட்சமும், 6வது இடம் பிடிப்பவருக்கு 3.5 லட்சம் ரூபாயும், 7வது இடம் பிடிப்பவருக்கு 2.5 லட்சமும், கடைசி இடத்தை அதாவது 8வது இடத்தை பிடிப்பவருக்கு 2 லட்சமும் பரிசுத் தெகையாக வழங்கப்படவுள்ளது என்று தற்பொழுது அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.