வெகு விமர்சையாகக் கொண்டாடப் பட்ட அடிக்கல் நாட்டு விழா

0
106

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியாக இன்று அடிக்கல் நாட்டு விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.இன்று விழாவில் 175 உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.ராமர் கோயில் கட்டும் பணியை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று உத்தரப்பிரதேசம் அயோத்திக்கு 29 ஆண்டுகளுக்குப் பிறகு வந்தார்.இவர் தங்க நிறத்திலான குர்தாவையும் வெள்ளை நிற வேட்டியையும் அணிந்து கொண்டு விழாவில் பங்கேற்றார்.

கோயில் கட்டும் பணி தொடங்கும் வேலையாக அயோத்தியில் வெள்ளியாலான செங்களை நட்டுவைத்து பணியை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. இதற்காக டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு புறப்பட்டார்.

ராமர் கோயிலுக்கு வரும்முன் லக்னோ விற்கு சென்று அனுமனை தரிசித்து விட்டு ,பின் ராமரின் ஜென்ம பூமியான அயோத்திக்கு வந்தார்.

1991 ஆம் ஆண்டு இராமர் கோவிலைக் கட்டுவதற்காக பலரும் ஆர்வம் காட்டி வந்த நிலையில் , பிரதமர் நரேந்திர மோடியும் அவர்களும் ஒன்று.இந்தக் கோயிலின் மாதிரி வடிவமைப்பை கடந்த திங்கட்கிழமை அன்று வெளியிட்டுள்ளது.அதில் மூன்று அடுக்கு தூண்களும்,மடங்களும் மற்றும் இதன் உயரமாக 161 அடியாக கணக்கிடப்பட்டது.

இவ்விழாவில் நரேந்திர மோடி மட்டுமல்லாமல் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்,மோகன் பகவத் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட விஐபிகள் இவ்விழாவில் பங்கேற்றனர்.உள்துறை அமைச்சரான அமித்ஷா கொரோனாவால் மருத்துவமனையில் உள்ளதால் அவர் இவ்விழாவில் பங்கேற்கவில்லை.

அயோத்தி ராமர் கோயில் ஐந்து ஏக்கரில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 2.77 ஏக்கரில் கோயில் அமைய இருக்கிறது.உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி 5 ஏக்கரில் வேறு ஒரு இடத்தில் மசூதி கட்ட அனுமதி அளித்துள்ளது.

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜைக்கு இந்தியாவில் இருந்து பல்வேறு இடங்களிலிருந்து புனித நீரும், நூற்றுக்கும் மேற்பட்ட புனித ஆறுகளில் இருந்து தண்ணீரும் வரையறுக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K