தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.!

0
80

தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்திற்கு 16 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையை ஒட்டி நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக தென் மேற்குப் பருவக் காற்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தீவிரமடைந்துள்ளதால் நீலகிரி மாவட்ட மலைப்பகுதியில் அதி கனமழையும், கோவை, தேனியில் கனமழையும் பெய்ய வாய்ப்பு.

மேலும், தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சென்னை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

மேலும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்றும் கூறப்படுகிறது.

மன்னார் வளைகுடா பகுதிகளில் ஆகஸ்ட் 5 மற்றும் 6ம் தேதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும், மேலும் மத்திய மற்றும் தெற்கு வங்ககடல் பலத்த சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K