சேலம் அருகே கல்லூரி மாணவி கடத்தல்! இளைஞர் போக்சோவில் கைது

சேலம் அருகே கல்லூரி மாணவி கடத்தல்! இளைஞர் போக்சோவில் கைது

சேலம் மாவட்டம் கல்பாரப்பட்டியை சேர்ந்த மாணவி (17) இவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் B.Sc கம்ப்யூட்டர் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார் .

இந்நிலையில் இவருக்கும் அதே ஊரை சேர்ந்த  பெருமாள்  மகன் மோகன் என்பவருக்கும் தொடர்பு ஏற்ப்பட்டுள்ளது, மாணவி தனது பெற்றோருக்கு தெரியாமல் அவரை காதலித்து வந்துள்ளார்.

இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் மாணவியை கண்டித்துள்ளனர்.  இதனை தொடர்ந்து மாணவி கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி அன்று காணமல் போனதால் அச்சம் அடைந்த பெற்றோர்  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில்  மோகன் மாணவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி அழைத்து சென்றது தெரிய வந்தது.

தேடுதல் வேட்டையில் இறங்கிய காவல்துறையினர் இருவரையும் கண்டுபிடித்தனர் .  இந்நிலையில் மோகனை போக்சொ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மாணவியை பெற்றோருடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்ட நிலையில், அதற்கு மாணவி மறுப்பு தெரிவிக்கவே சேலத்தில் உள்ள மகளிர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.