அரசு மருத்துவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன சென்னை உயர்நீதிமன்றம்!

0
56

அரசுசாரா மருத்துவர்கள் சங்கம் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கிராமப்புறங்களில் பணிபுரியக்கூடிய அரசு மருத்துவர்களுக்கு என்.டி.எம்.எஸ் முதுகலை மருத்துவப் படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் 30 சதவீதம் ஊக்கத்தொகை மதிப்பெண் வழங்கப்படும் என்று கடந்த வருடம் அக்டோபர் மாதம் தமிழக அரசு சார்பாக உத்தரவிடப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள்.

தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற முதுகலை மருத்துவப் படிப்பில் 1968 இடங்கள் கிடைக்கிறது என்றும், இதில் 50% அகில இந்திய இட ஒதுக்கீட்டிற்கு சென்று விடும் எனவும், மீதம் இருக்கின்ற 969 இடங்கள் இருப்பதாகவும், அதில் 50% அரசு மருத்துவர்களுக்கு கொடுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

அதோடு ஊக்க மதிப்பெண்ணும் கூடுதலாக வழங்குவதால் மீதம் இருக்கின்ற 50 சதவீத இடங்களுக்கு அரசு மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தனியார் மருத்துவமனையில் படித்தவர்களுக்கு வாய்ப்பு வருவதாக அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஆகவே இதில் ஏதாவது ஒன்றை தான் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள், இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி தண்டபாணி கிராமப்புற மருத்துவமனைகளில் பணிபுரியக்கூடிய மருத்துவர்களுக்கு இரண்டையுமே வழங்க எந்தவிதமான தடையும் இல்லை என்று தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

பொதுப் பிரிவிலும் அவர்கள் பங்கேற்பதற்கு எந்தவிதமான தடையும் இல்லை எனவும், நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து நீதிபதி உபாத்யாயா, சக்திகுமார், சுகுமார், உள்ளிட்டோர் அடங்கிய அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த சமயத்தில் அரசு சார்பாக ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் மற்றும் அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் உள்ளிட்டோர் அரசு மருத்துவர்கள் கிராமப்புறங்களில் மலைப்பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணி புரிவதாகவும் இதன் காரணமாக, பொதுமக்கள் தான் பயன் பெறுவதாகவும் கூறினர்.

தனி நீதிபதி ஆராய்ந்துதான் தகுந்த உத்தரவு வழங்கியிருப்பதாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆகவே மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.

இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தனி நீதிபதி உத்தரவு சரியானதுதான் என்றும், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் தெரிவித்து மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறார்கள்.