இதெல்லாம் சாப்பிட்டீங்களா போதும்!!  மூளையின் திறன்கள் பல மடங்கு அதிகரிக்கும் ஞாபக சக்தியை இல்லாமல் போக வாய்ப்பில்லை!!

0
128
#image_title

இதெல்லாம் சாப்பிட்டாலே போதும்!!  மூளையின் திறன்கள் பல மடங்கு அதிகரிக்கும்!! ஞாபக சக்தி இல்லாமல் போக வாய்ப்பில்லை!!

நம் வாழ்க்கையை நடத்துவதற்கு தேவையானது திறமை. நம் திறமை அடிப்படையில் நாம் வாழ்க்கை அமைகிறது. மேலும் புத்திசாலித்தனமான செயல்படுவதால் அடிப்படையாக நம் மூளை எவ்வளவு சிறப்பாக ஒருங்கிணைக்கிறது  என்று நாம் அறிந்து கொள்ளலாம். தற்போது உள்ள உணவுப் பழக்கங்களால் ஞாபக சக்தி குறைபாடு அதிகம் ஏற்படுகிறது. நமக்குத் தேவையான ஞாபக சக்தி குறைவதற்கு காரணம் தேவையான சத்துக்கள் உள்ள உணவுகளை நாம் எடுத்துக் கொள்ளாதது. இதனால் நம் உண்ணும் உணவில் ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டால் விரைவில் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

1. மீன் உண்ணும் போது ஒமேகா 3 நிறைந்துள்ள மீனை எடுத்துக்கொண்டால் மூளைக்கு தேவையான ஒமேகா 3 அதிக அளவில் கிடைக்கிறது. இதனால் ஞாபக சக்தி அதிக அளவில் இருக்கும் .

2. வால்நட்ஸ் கர்ப்பிணி பெண்கள் உண்பதால் குழந்தை மூளை வளர்ச்சி அதிகப்படுத்துகிறது. இது மூளைக்கு மட்டுமின்றி இதயத்திற்கும் ஒரு மருந்தாக அமைகிறது. இதில் அல்ஜிமர் அதிகம் இருப்பதால் ஞாபக சக்தி அதிக அளவில் இருக்கும்.

3. முட்டை மூளை வளர்ச்சிக்கு தேவையான விட்டமின் பி6 பி12 அதிகம் இருப்பதால் முட்டை உண்பதால் மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ் அதிகமாக உருவாகுவதால் மூளை வளர்ச்சிக்கு தேவையான அனைத்தும் கிடைக்கிறது. மேலும் இது மூலையை வேலை செய்ய அதிகம் பயன்படுகிறது.

4. பூசணி விதை ஆண்டி ஆக்சிடென்ட், காப்பர் மற்றும் ஜிங்க் போன்றவைகள் அதிகமாக உள்ளதால் மூளையில் இருக்கும் ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களை குறைக்கிறது. மேலும் மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.

5. பால் புரோட்டின் விட்டமின்ஸ் அதிகம் உள்ளது. இது மூளையில் தகவலை பரிமாறிக் கொள்ள உதவுகிறது. மேலும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வின் போது  மூளை நோய்களை வரவிடாமல் தடுக்கிறது என்று வந்திருக்கிறது.

6. மஞ்சள் அதிக ஞாபக சக்தியை உருவாக்கிறது. இது மூளையில் புதிய செல்களை அதிகரிக்க உதவுகிறது. மஞ்சள் சேர்த்துக் கொள்வதால் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று ஆய்வில் கூறப்படுகிறது. வெளிநாட்டில் இருப்பவர்கள் மஞ்சகள் மாத்திரையாக உண்பதாக தகவல் வந்துள்ளது.

7. கொண்டைக்கடலை மெக்னீசியம் நிறைந்துள்ளதால் மூளைக்கு தேவையான ரத்தத்தை அனுப்பி மூளை ஞாபக சக்தி வைத்திருக்கிறது. மேலும் ஞாபக சக்தி மற்றும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்கிறேன்.

8.ஆரஞ்சு ஜூஸ் அதிகம் எடுத்துக் கொண்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும் என்று ஆய்வில் கூறப்படுகிறது.

9.சாக்லேட் மற்றும் டார்க் சாக்லேட்டில் அதிகம் பிலமிநாய்டு அதிகம் இருப்பதால் புதிய ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. மேலும் மன அழுத்தத்தை குறைக்கிறது.

10.நட்ஸ் தேவையான நியூட்ரியண்ட்ஸ் அதிகம் உள்ளதால் ஞாபக சக்தி அதிகரிக்க உதவுகிறது.

மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை உண்பதால் ஞாபக சக்தி அதிகரிக்கிறது.

author avatar
Jeevitha