சளி இரும்பல் வயிற்று கோளாறு போன்ற இவை அனைத்திற்கும் ஒரே தீர்வு!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை!

0
236

சளி இரும்பல் வயிற்று கோளாறு போன்ற இவை அனைத்திற்கும் ஒரே தீர்வு!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை!

பனி காலம் என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்க கூடிய பொதுவான பிரச்சனை என்னவென்றால்
நெஞ்சு சளி, சளி,இரும்பல், தொண்டைவலி,மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகளே.சிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் பனி காலத்தில் தோன்றும்.இவை அனைத்திற்கும் இந்த இரண்டு பொருளே போதும்,மாத்திரை மருந்து செலவு இல்லாமல் நல்ல தீர்வை தர.

துளசி பவுடர் மற்றும் தேன் அல்லது வெந்நீர் இவை இரண்டுமே மேலே கூறிய இந்த அனைத்து பிரச்சனைகளையும் மூன்றிலிருந்து ஐந்து நாட்களுக்குள் சரி செய்யும்.

துளசியை பறித்து நன்றாக கழுவி நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.சளி இரும்பல் பிரச்சனையின் போது 5 கிராம் அளவு துளசி பொடியை எடுத்து அதில் சிறிதளவு தேன் அல்லது வெந்நீரை கலந்து,காலை மற்றும் இரவு என இரு வேளைகளிலும் உணவு அருந்தியதற்கு பின்பு குடித்து வந்தால் சளி,இரும்பல் தொண்டை வலி,வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனை போன்ற அனைத்தும் மூன்றிலிருந்து ஐந்து நாட்களுக்குள் தீர்வு கிட்டும்.

மேலும் இந்த பொடியை நாம் அடிக்கடி எடுத்துக் கொண்டால் உடல் சோர்வு நீங்கி சுறுப்பு அடையும்.மேலும் உடலை குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ளும்.

Previous articleஉங்க ஆதார் கார்டை பயன்படுத்தி எத்தனை பேர் Sim யூஸ் பண்றாங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? இதோ உங்களுக்கான பதிவு!!
Next articleமேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here