மலச்சிக்கல் ஏற்பட முக்கிய காரணங்கள் இதோ!..

0
86

மலச்சிக்கல் ஏற்பட முக்கிய காரணங்கள் இதோ!..

 

மலச்சிக்கல் என்பது மனிதனுக்கு ஏற்படும் ஒரு உடல் உபாதை ஆகும். மனிதன் உட்கொள்ளும் உணவானது சில காரணங்களால் மலக்குடலில் தங்கிவிடுவதால் மலம் கழிக்கும் போதுஇ மலம் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஒரு வாரத்தில் 3 அல்லது அதற்கும் குறைவான தடவை மலம் வெளியேறினால்⁹ அல்லது மலம் மிகவும் வலியுடன் மிகவும் உலர்ந்தும் வெளியேறினால் அதைத்தான் மலச்சிக்கல் என்கிறோம்.

குடலில் ஏற்படும் கட்டி புற்றுநோய் அடைப்பு நீண்ட காலக் குடலிறக்கம் மூலநோய் முதலிய நோய்கள் மலச்சிக்கலுக்கு காரணமாகும்.தைராய்டு என்னும் நாளமில்லாச் சுரப்பி குறைவாக சுரத்தல் உடலில் சுண்ணாம்புச் சத்து அதிகமாகுதல் பொட்டாசியம் குறைதல் மனச் சோர்வு ஆகியவையும் காரணமாகும்.

உணவுமுறையில் மாற்றம் குறைந்த நார்ச்சத்துள்ள உணவு சாப்பிடுவது தேவையான அளவு நீர் மற்றும் திரவ உணவுகள் அருந்தாமை.இரும்பு சுண்ணாம்பு மாத்திரைகள் மற்றும் வலியை மட்டுப்படுத்தும் சில மாத்திரைகள் உடல் உழைப்பின்மை அதிக மனஅழுத்தம் மலம் வரும் போது கழிக்காமல் அடக்கி வைத்துக் கொள்வது பெருங்குடல் மிக மெதுவாக வேலை செய்தால் கழிவுப்பொருட்கள் அதிகநேரம் தங்கி மலம் இறுகிவிடுகிறது.சிலருக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு மட்டும் மலச்சிக்கல் ஏற்படும்.

author avatar
Parthipan K