எதை நோக்கி பயணிக்கிறது தமிழ்நாடு? போதை தலைக்கேறிய நிலையில் தள்ளாடிய பள்ளி மாணவிகள்!

0
190

தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை அழைத்து போதை பொருளை ஒழிக்க கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதில் சமரசம் செய்தால் காவல்துறையின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கைவிடுத்திருந்தார். தமிழ்நாடு முழுவதுமிருக்கின்ற விளையாட்டு அரங்குகள் மற்றும் பள்ளி வளாகங்களில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த சூழ்நிலையில், கரூர் சர்ச் கார்னர் அருகே 3 பள்ளி மாணவிகள் நடுரோட்டில் மது போதையில் தடுமாறிக் கொண்டிருந்தார்கள். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதி கடைக்காரர்கள் உடல் குறைவு காரணமாக, இப்படி நடந்திருக்கலாம் என்று நினைத்து அவசர ஊர்திக்கு தகவல் வழங்கினார்கள்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அவசர ஊர்தியை கண்டதும் ஒரு மாணவி சுதாரித்துக் கொண்டு அங்கிருந்து நழுவிச் சென்றார், மற்ற இரு மாணவிகளால் நகர முடியவில்லை. இதனைத் தொடர்ந்து அவர்கள் அருகில் சென்று பார்த்த போது தான் மாணவிகள் போதையிலிருப்பது தெரியவந்தது. பொதுமக்கள் இருவரையும் அவசர ஊர்தியில் ஏற்றி கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.

அதன்பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் திடக்கிடும் தகவல் வெளிவந்தனர் போதை மயக்கத்தில் தடுமாறிய அந்த மூன்று மாணவிகளும் கரூர் மாநகரிலிருக்கின்ற ஒரு அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருவதாகவும், தேர்வில் தோல்வியடைந்த நிலையில், மறுதேர்வு எழுதுவதற்காக வேறொரு பள்ளிக்கு வந்ததாகவும், தெரிய வந்திருக்கிறது. தேர்வை எழுதிய மகிழ்ச்சியில் வெளியில் வந்த அவர்கள் நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்தார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அதன் பிறகு ஒயின் குடித்தால் மேலும் கலராக மாறலாம் என்று யாரோ தெரிவித்த தகவலை கேட்டு டாஸ்மாக் கடையில் ஒயின் வாங்கி 3 பேரும் குடித்திருக்கிறார்கள். அதன்பிறகு வழக்கம் போல வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர், ஆனால் செல்லும் வழியில் போதை தலைக்கேறி தடுமாறி விழுந்திருக்கிறார்கள். தெரியாமல் குளித்து விட்டதாக அந்த மாணவிகள் காவல்துறையிடம் அழுது புலம்பியதாக சொல்லப்படுகிறது.

ஆனால் போதையில் சுதாரித்துக் கொண்டு அவசர ஊர்தியில் ஏறாமல் தப்பி சென்ற மாணவியையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அதோடு அவர்களுடைய பெற்றோரையும் அழைத்து அறிவுரை தெரிவித்து அனுப்பி வைத்தார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.