பகையால் தான் சுட்டுக்கொன்றேன்!!ராணுவ முகாமில் 4 ராணுவ வீரர்களை சுட்டு கொன்ற விவகாரம்!!

0
114
#image_title

பகையால் தான் சுட்டுக்கொன்றேன்!!ராணுவ முகாமில் 4 ராணுவ வீரர்களை சுட்டு கொன்ற விவகாரம்!!

கடந்த வாரம் 12-ம் தேதி பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் 4 ராணுவ வீரர்கள் சுட்டு கொள்ளப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து ராணுவ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இறந்த நான்கு பேரில் இருவர் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், அதில் ஒருவர் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள வனவாசி கிராமத்தை சேர்ந்த கமலேஷ் மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த லோகேஷ் குமார் என அதிகார பூர்வமாக அறிவித்தது.

இந்த துப்பாக்கி சூடு குறித்து பஞ்சாப் மாநில காவல்துறை உயரதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நடைபெற்ற சம்பவத்திற்கும் பயங்கரவாத கும்பலுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்றும், இந்த சம்பவத்தின் போது ராணுவம் முகாமில் உள்ள மற்ற வீரர்களுக்கும், அங்குள்ள பொருட்களுக்கும் எவ்வித சேதாரமும் ஏற்படவில்லை, எனவே இது தனிமனித தாக்குதல் போல தான் தெரிகிறது என அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் மரணமடைந்த சேலத்தை சேர்ந்த ராணுவ வீரரின் உடல் அடக்கம் செய்ய அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட போது, அவரது உறவினர்கள் கமலேஷின் மரணத்திற்கு உரிய விசாரணை நடத்தபட வேண்டும், அதே சமயத்தில் உரிய ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட வேண்டும் என கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சேலத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து சேலம் ராணுவ அலுவலகத்தில் உள்ள ராணுவ வாகனம் வரவழைக்கப்பட்டு அதில் அவரது உடல் ஏற்றப்பட்டு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

இதனிடையே இந்த சம்பவம் குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சக ராணுவ வீரர் ஒருவரே அந்த நான்கு வீரர்களையும் சுட்டு கொன்றுள்ளார் என்றும், அவரது பெயர் தேசாய் மோகன் என்பதும், அவர்களிடையே தனிப்பட்ட பகை காரணமாக இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றது என விசாரணை அதிகாரியான குல்னீத் சிங் குரானா தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.