ரன் ஓட மறுத்ததால் ஐசிசி-யின் ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருதை வென்ற வீரர்!

0
80

ரன் ஓட மறுத்ததால் ஐசிசி-யின் ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருதை வென்ற வீரர்!

சர்வதேச கிரிக்கெட் களத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் சிறப்பாக கிரிக்கெட் விளையாடிய  சிறந்த கிரிக்கெட் வீரர்கள் யார் என்பதை வாக்கெடுப்பு மூலம் கண்டறிந்து அவர்களுக்கு விருது வழங்கி வீரர்களை கௌரவித்து வருகிறது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி).

கடந்த  பத்து ஆண்டுகளின் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த ஒருநாள் வீரர், சிறந்த டெஸ்ட் வீரர், சிறந்த டி20 வீரர், ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் விருது என வெவ்வேறு பிரிவுகளில் விருது கொடுக்கப்பட்டு வருகிறது.

டி20 உலகக் கோப்பை கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 167 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தது.

டேரில் மிட்சல், நீஷம் ஆகியோர் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, நீஷம் தரையோடு அடித்த பந்தை பந்து வீச்சாளர் ஆதிக் ரஷித் தடுக்கக்கூடிய தூரத்தில் நேரான திசையில் வந்தது. அப்போது எதிர்முனையில் இருந்த டேரில் மிட்செல் ரன் அவுட்டாகாமல் இருந்து கிரீஸ்க்குள் பேட்டை வைக்க முயற்சி செய்தார்.

அப்போது ரஷித் மீது பயங்கரமாக மோதிக்கொண்டார். ஆனால் மிட்செல் மீது தவறு இல்லாத நிலையில், ரஷித் தடுமாறியதால் மிட்செல் ரன் ஓட மறுத்துவிட்டார். அப்போது, மிட்செல் நேர்மையை பார்த்து கிரிக்கெட் விமர்சகர்கள் பாராட்டினர்.

இந்த நிலையில், டேரில் மிட்செலுக்கு ஐசிசி ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருதை வழங்கி கவுரவித்துள்ளது. நியூசிலாந்தை சேர்ந்த வெட்டோரி, மெக்கல்லம், கேன் வில்லியம்சன் ஆகியோர் இதற்கு முன் ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K