பொங்கல் இந்த திசையில் பொங்கினால் கோடீஸ்வர யோகம்!

0
225
#image_title

பொங்கல் திருநாளன்று பொங்கல் எந்த திசையில் பொங்கினால் என்ன நடக்கும் என்பதை பற்றி நம் முன்னோர்கள் சொன்ன கணிப்பை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

 

ஒரு சிலர் மாட்டு பொங்கல் அன்றைக்கு மாட்டின் முன் பொங்கல் வைத்து முதலில் பொங்கலை மாட்டுக்கு கொடுத்து அதன் பின் மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ்வார்கள்.

 

இப்படி பொங்கலுக்கு பாலை ஊற்றும் பொழுது, எந்த பக்கம் பொங்கல் பொங்குகிறது? அதனால் என்ன பலன்? இந்த திசையில் பொங்கினால் இந்த யோகம் என்று நம் முன்னோர்கள் ஏற்கனவே வழி வகுத்து வைத்திருக்கிறார்கள். இந்த வருடம் முழுவதும் இப்படித்தான் நமது யோகம் இருக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள் அதைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

 

1. கிழக்கு திசையில் பொங்கல் பொங்கினால் சுப செலவுகள் நடக்கும் அதாவது வீடு வாங்க வேண்டும் என்று நினைத்தவர்கள் வீடு வாங்கும் யோகம் வரும். வண்டி வாகன வாங்கும் யோகம் வரும். தங்க நகை வாங்கும் யோகம் வரும்.

2. மேற்கு திசையில் பொங்கல் பொங்கினால் சுப காரியங்கள் வீட்டில் நடக்கும். வீட்டு மனம் செய்ய வேண்டிய வயதில் பெண்களோ ஆண்களோ இருந்தால் இந்த வருடத்தில் நல்ல மணப்பெண் கிடைப்பார்கள் அதேபோல் நல்ல பையன் கிடைப்பான். வாழ்க்கை செழிப்பாக இருக்கும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

3. வடக்கு திசை தான் முக்கியமான விசை வடக்கு திசையில் பொங்கல் பொங்கினால் பண வரவு உண்டாகும். பதவி உயர்வு கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். சொத்து பிரச்சனைகள் இருந்தால் தீரும்.

4. தெற்கு திசையில் பொங்கல் பொங்கினால் அந்த வீட்டில் அந்த வருடம் முழுவதும் மருத்துவ செலவுகள் அதிகமாக இருக்கும். சுப காரியங்கள் நடப்பதற்கு தாமதமாகும்.

author avatar
Kowsalya