இந்த 5 பொருள் இருந்தா போதும் வாய்ப்புண் வர வாய்ப்பில்லை!! வேகமாக குணமாகும் சூப்பர் டிப்ஸ்!!

0
89
#image_title

இந்த 5 பொருள் இருந்தா போதும் வாய்ப்புண் வர வாய்ப்பில்லை!! வேகமாக குணமாகும் சூப்பர் டிப்ஸ்!!

வாய்ப்புண் என்பது ஒரு தொற்று நோய் அல்ல அது பாக்டீரியாக்கள் தொந்தரவுகளால் ஏற்படுகிறது. வாய்ப்புண் பெரும்பாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவரை அதிகம் பாதிக்கிறது .  மேலும் விட்டமின் பி 12 மற்றும் இரும்பு சத்து,  போலிக் அமிலம் குறைபாடு உள்ளவர்களுக்கு வாய்ப்புண் அதிகம் ஏற்படுகிறது.  முதலில் வாய்ப்புண் ஒரு புள்ளியாக தோன்றும் அதன் பிறகு சிறு சிறு குழி புண்களாக மாறி சாப்பிடும் போது அதிக வலியை ஏற்படுத்துகிறது. மேலும் இதனால் காய்ச்சல் தலைவலி ஏற்படுகிறது.

காரணங்கள்

உடல் சூடு, வயிற்றுப்புண், விட்டமின் சி குறைபாடு, மலச்சிக்கல், பித்த அஜீரணம், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, ஊட்டச்சத்து குறைபாடு, வீரியம் அதிகம் உள்ள மருந்து மாத்திரைகளை உண்பதாலும் இது போன்ற பல காரணங்களால் வாய்ப்புண் ஏற்படுகிறது.

மேலும் இது மட்டுமின்றி புகை பிடித்தல் பழக்கம் உள்ளவர்களுக்கு வாய்ப்புண் அதிகம் ஏற்பட காரணமாக அமைகிறது. இது மட்டுமின்றி மது அருந்துபவர், பான் மசாலா சுவைப்பவர், வெற்றிலை மற்றும் புகையிலை உண்பவர்கள் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் வாய்ப்புண் ஏற்படும்.

வாய்ப்புண் வராமல் தடுக்க உண்ண வேண்டிய உணவுகள்

1. மிளகு தக்காளி அல்லது மணத்தக்காளி கீரைகளை உண்பதால் வாய்ப்புண் விரைவில் குணமடைகிறது. இதில் விட்டமின் பி, இரும்பு சத்துக்கள் மற்றும் போலிக் சத்துக்கள் நிறைந்து உள்ளதால் வாய் புண்களை விரைவில் ஆருகிறது .

2. தேங்காய் பால்

இதில் லாரிக் ஆசிட், விட்டமின் மற்றும் மினரல்ஸ் சத்துக்கள் நிறைந்த தேங்கா பாலை உண்பதால் வாய்ப்புண் வயிற்றுப்புண் கூடிய விரைவில் ஆறும் என்பது மருத்துவர்கள் கருத்தாகும்.

3.மோர்

லாக்டோ பேஸ் போன்ற பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளதால் ஜீரண மண்டலத்திற்கு மிக உதவியாக இருக்கிறது. மேலும் இதில் லாக்டோபஸ் பாக்டீரியா இருப்பதால் மற்ற தீய பாக்டீரியாக்களை தடுக்கிறது. இதனால் வாய்ப்புண் அதி விரைவில் குணமடைகிறது.

4. தேன்

இதில் ஆன்ட்டி பாக்டீரியல், ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டீரியல், ஆன்ட்டி ஆக்சிடென்ட் இருப்பதால் வாய்ப்புண் குடல் புண் வயிற்றுப்புண் ஏற்படுவதை குறைக்கிறது.

5. தண்ணீர்

தண்ணீர் அதிகமாக எடுத்துக் கொண்டால் உடல் வெப்பநிலை குறையும். இதனால் ஏற்படும் வாய்ப்புண் வயிற்றுப்புண் ஆற உதவியாக இருக்கிறது.

இந்த ஐந்து பொருட்களை எடுத்துக் கொண்டால் போதும் வாய்ப்புண் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. மேலும் விரைவில் குணமடையவும் இவைகள்  உதவுகிறது. மேலும் இவைகளை அன்றாட வாழ்வில் சேர்த்து வந்தால் வாய்ப்புண் வருவதற்கு வாய்ப்பில்லை.

author avatar
Jeevitha