திரும்புகிற திசையெங்கும் புதுமை!! சாலையோர தேநீர் வியாபாரியை ஒரே நாளில் பிரபலப்படுத்திய மைக்ரோசாஃப்ட் நிறுவனர்!!

0
204
The founder of Microsoft who made the roadside tea seller famous in one day!!
The founder of Microsoft who made the roadside tea seller famous in one day!!

திரும்புகிற திசையெங்கும் புதுமை!! சாலையோர தேநீர் வியாபாரியை ஒரே நாளில் பிரபலப்படுத்திய மைக்ரோசாஃப்ட் நிறுவனர்!!

ஒரே நாளில் ஒபாமா என்பது போல உலக பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் சாலையோர தேநீர் வியாபாரி ஒருவரை பிரபலப்படுத்தியுள்ளார்.

தற்போது இந்தியாவில் பிரபலமாக வைரலாகி வரும் நிகழ்வுகளில் ஒன்று இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழா தான். உலக நாடுகளைச் சேர்ந்த ஏராளமான விவிஐபிகளுக்கு தனது மகனின் திருமண விழாவிற்கு முகேஷ் அம்பானி அழைப்பு விடுத்துள்ளார்.

தனது மகனின் திருமணத்திற்கு என்று தனித்துவமாக காடு ஒன்றையே வித்தியாசமாக உருவாக்கியுள்ள முகேஷ் அம்பானி மேலும் விருந்தினர்கள் வந்து செல்வதற்கு பல்வேறு வகையில் வியக்கத்தகு ஏற்பாடுகளை செய்துள்ளார். தற்போது உலக அளவில் இந்த திருமணம் பேசு பொருளாகியுள்ளது.

இந்த சூழ்நிலையில் முகேஷ் அம்பானி வீட்டு திருமண விழாவிற்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விழாவில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள பில்கேட்ஸ் ஆச்சரியமூட்டும் வகையில் சாலையோர டீக்கடை வியாபாரி ஒருவரை பிரபலப்படுத்தியுள்ளார்.

திருமணத்திற்கு வந்துள்ள பில்கேட்ஸ் நாக்பூர் சென்றுள்ளார். அங்கு யூடியூபில் பிரபலமான டோலி சாய்வாலா என்ற நபர் சாலையோரம் தேநீர் கடை ஒன்றை வைத்துள்ளார். இவரது கடைக்குச் சென்ற பில்கேட்ஸ் ஒரு தேநீர் கேட்டுள்ளார். ஆனால் டோலிக்கோ தனது கடைக்கு வந்திருப்பது பில்கேட்ஸ் என்றும் அவர் உலக பணக்காரர்களில் ஒருவர் என்றும் தெரியவில்லை.

திருமணத்திற்கு வந்துள்ள பில்கேட்ஸ் நாக்பூர் சென்றுள்ளார். அங்கு யூடியூபில் பிரபலமான டோலி சாய்வாலா என்ற நபர் சாலையோரம் தேநீர் கடை ஒன்றை வைத்துள்ளார். இவரது கடைக்குச் சென்ற பில்கேட்ஸ் ஒரு தேநீர் கேட்டுள்ளார். ஆனால் டோலிக்கோ தனது கடைக்கு வந்திருப்பது பில்கேட்ஸ் என்றோ அவர் உலக பணக்காரர்களில் ஒருவர் என்றோ தெரியவில்லை.

அவர் வழக்கம் போல தேநீர் போடுவதில் முனைந்துள்ளார். வித்தியாசமான முறையில் சுவையாக தேநீர் போடுவதில் வல்லவரான டோலி இஞ்சி மற்றும் ஏலக்காயை தட்டி போட்டு அருமையான டீ ஒன்றினை பில்கேட்ஸ் அவர்களிடம் கொடுக்க அதனை ருசித்த மைக்ரோசாஃப்ட் நிறுவனர் அதன் சுவையில் அசந்து மெய்மறந்துள்ளார்.

அதன் பின்னர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்த பில்கேட்ஸ் அதில் இந்தியாவில் திரும்புகிற திசை எங்கும் புதுமைகளை காணலாம். அதில் இந்த தேநீர் தயாரிப்பும் ஒன்று என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

ஆனால் இந்த வீடியோ வெளியாகி வைரலான பின்னால்தான் டோலி சாய்வாலாவுக்கு உண்மை தெரிய வந்துள்ளது. ஒரே நாளில் ஒபாமாவாக மாறிய டோலி சாய்வாலாவிடம் பல்வேறு ஊடகங்கள் தற்போது நேர்காணல் கண்டு பில்கேட்ஸ் உடனான அனுபவத்தை பகிர்ந்து கொள்கின்ற வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

டோலி சாய்வாலா கூறுகையில் எனது கடையில் என்னிடம் வந்து தேநீர் கேட்டவரை பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. நான் வழக்கம் போல சுவையான தேநீரை தயாரிப்பதில் எனது முழு கவனத்தையும் செலுத்தியதால் அவரைப் பற்றிய விவரங்களை நான் கேட்கவில்லை. அதுமட்டுமில்லாமல் அவர் இவ்ளோ பெரிய ஆள் என்றும் இவ்வளவு உயரத்தில் உள்ளவர் என்றும் எனக்கு தெரியாது. ஆனால் என்னால் எட்ட முடியாத இவ்வளவு பெரிய உயரத்தில் உள்ள ஒரு நபரை நான் சந்திப்பேன் என்று கனவிலும் நினைத்ததில்லை என பில்கேட்ஸ் உடனான தனது சந்திப்பை அனைவரிடமும் உணர்ச்சி பெருக்குடன் பகிர்ந்து வருகிறார்.