உடல் எடை அதிகரிக்க!! தினமும் பச்சை பயிர் சாப்பிடுங்கள்!!

0
78

உடல் எடை அதிகரிக்க!! தினமும் பச்சை பயிர் சாப்பிடுங்கள்!!

ஒல்லியாக இருப்பவர்கள் உடல் எடையை அதிகரிக்க கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்.எடை அதிகரிப்பது அல்லது உங்கள் உடலில் தசை அடர்த்தியை அதிகரிப்பது ஒன்றும் உடல் எடையை குறைப்பது போல எளிதான காரியம் அல்ல.

இருப்பினும், உங்கள் தினசரி உணவில் சில உணவுப் பொருட்களைச் சேர்ப்பதன் மூலம், ஆரோக்கியமான முறையில் திறம்பட உங்கள் எடையை அதிகரிக்கலாம்.

இன்றைய கொரோனா நெருக்கடி காலத்தில் வீட்டிலேயே பணிபுரிபவர்கள் உடலுக்கு எந்த ஒரு வேலையையும் கொடுக்காமல் உட்கார்ந்த நிலையிலேயே பல மணி நேரங்கள் இருப்பதால் அதிகரித்த உடல் எடை மற்றும் உடல் பருமன், தொப்பை கொழுப்பு போன்ற எடை சார்ந்த பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.

இதன் காரணமாக, ஜிம்களுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், உடல் எடையை குறைக்கும் வகையில் இந்திய பாரம்பரிய டயட்டுகளுக்கு மக்கள் தங்கள் உணவு முறையை மாற்றி வருகின்றனர்.

எடை அதிகரிப்பது அல்லது உங்கள் உடலில் தசை அடர்த்தியை அதிகரிப்பது ஒன்றும் உடல் எடையை குறைப்பது போல எளிதான காரியம் அல்ல. இருப்பினும், உங்கள் தினசரி உணவில் சில உணவுப் பொருட்களைச் சேர்ப்பதன் மூலம், ஆரோக்கியமான முறையில் திறம்பட உங்கள் எடையை அதிகரிக்கலாம்.

உடல் எடையை அதிகரிக்க அல்லது ஆரோக்கியமாக தசையை வளர்ச்சியை அதிகரிக்க உதவும் சிறந்த உணவு வகைகள் குறித்து பின்வருமாறு காண்போம்.

இதற்கு வீட்டில் எடுக்கக்கூடிய உணவு முறைகள் அவை:

1: முதலில் பழைய சாதத்தை எடுத்து அதில் சிறிதளவு தயிர் சேர்த்து நன்றாக மிக்ஸியில் அரைத்து எடுத்து காலையில் குடித்து வந்தால் நம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.

2: வெந்தயத்தை இரவு முழுக்க தண்ணீரில் ஊற வைத்து அதை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நம் உடல் ஆரோக்கியமாகவும் மற்றும் நம் உடலில் உள்ள சூட்டை குறைக்கும்.

3: தினமும் நாம் செவ்வாழை எடுத்து வந்தால் உடலுக்கு ஆரோக்கியமாக இருக்கும்.
பச்சை பயிரை நாம் தினமும் முளைகட்டி சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.

கொண்டைக்கடலையை நாம் வேகவைத்த தினமும் காலை மற்றும் மாலையில் சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.

4: உலர்ந்த திராட்சை பாதாம் மற்றும் முந்திரி தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நம் உடல் எடை அதிகரிக்கும்.

5: பேரிச்சம்பழம் இதில் அதிக இரும்புச்சத்து உள்ளது அதனால் இதை காலையில் இரண்டு மற்றும் இரவு தூங்கும் முன் இரண்டு சாப்பிட்டால் நம் உடல் எடையை அதிகரிக்கும் மற்றும் ஆரோக்கியமாக இருக்கும்.

6: வேர்க்கடலை இதை நாம் நன்றாக வறுத்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்க உதவும் .
இது போன்ற உணவுகளை நம் தினமும் எடுத்துக் கொண்டால் நம் உடல் ஆரோக்கியமாகவும் மற்றும் உடல் எடை அதிகரிக்கும்.

author avatar
Parthipan K