பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு காண இந்தியா உதவ தயாராக உள்ளது! உக்ரைன் அதிபருக்கு உறுதி அளித்தார் பிரதமர் நரேந்திர மோடி

0
63

உக்ரைன் நாட்டு அதிபர் வோளோடிமிர் ஸெலன்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி பேசியதை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோபாயுடன் தொலைபேசி மூலமாக உக்ரேனிய அதிபருடன் பேசியதாக தகவல் கிடைத்துள்ளது.

அந்த நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது சமீபத்தில் உக்ரைனின் சில பிராந்தியங்களை ரஷ்யா தன்னுடைய நாட்டுடன் இணைத்து கொண்டது. இதற்கு அமெரிக்கா கடுமையான கண்டனத்தை பதிவு செய்தது.

இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடினார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு காண இந்தியா பங்காற்ற தயாராக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்ததாகவும் தகவல் கிடைத்துள்ளன.

இந்த நிலையில், இன்று அமெரிக்க அதிபர் ஜோபைடன் உக்ரைன் அதிபருடன் தொலைபேசியில் உரையாடினார் என்று சொல்லப்படுகிறது. அப்போது அந்த நாட்டிற்கு புதிதாக 625 மில்லியன் டாலர் அளவுக்கு ராணுவ உதவி செய்வது என்று உக்ரைன் அதிபருக்கு உறுதியளித்திருந்தார் ஜோ பைடன். அதோடு, ட்விட்டரிலும் இது தொடர்பான தகவலை தெரிவித்திருந்தார் என்று சொல்லப்படுகிறது.