2 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்த இந்தியா!!! கடவுள் போல் காப்பாற்றிய கோஹ்லி மற்றும் ராகுல்!!!

0
32
#image_title

2 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்த இந்தியா!!! கடவுள் போல் காப்பாற்றிய கோஹ்லி மற்றும் ராகுல்!!!

இந்தியா மற்றும் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மதிய உலகக் கோப்பை தொடரில் இந்தியா அணி 2 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் களமிறங்கிய விராட் கோஹ்லி மற்றும் கே.எல் ராகுல் இருவரும் சிறப்பாக விளையாடி இந்தியாவை வெற்றி பெற வைத்தனர்.

நேற்று(அக்டோபர்8) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் பேட் செய்தது.

தொடங்கிய வீரர் மிட்செல் மார்ஷ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தாலும் மற்றொரு தொடங்கிய வீரர் டேவிட் வார்னரும் ஸ்டீவன் ஸ்மித் இருவரும் ஜோடூ சேர்ந்து சிறப்பாக விளையாடினர். டேவிட் வார்னர் 41 ரன்களுக்கும், ஸ்டீவன் ஸ்மித் 46 ரன்களுக்கும் ஆட்டமிழக்க அதன் பின்னர் களமிறங்கிய லபுசக்னே 27 ரன்களுக்கும் ஸ்டார்க் 28 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

அதன் பிறகு களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்களை எடுத்தது. இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். குல்தீப யாதவ், பும்ரா ஆகியோர் இரண்டு விக்கெட்டுகளையும், சிராஜ், ஹர்திக், அஷ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதையடுத்து 200 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இந்தியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. 2 ரன்கள் எடுப்பதற்குள் இந்திய அணி 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது அனைத்து ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்தது. 2019ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி கண் முன் வந்து நின்றது.

அதன் பின்னர் களமிறங்கிய விராட் கோஹ்லி மற்றும் கே.எல் ராகுல் இருவரும் பொறுமையாக விளையாடினர். சிறப்பாகவும் பொறுமையாகவும் விளையாடிய கே.எல் ராகுல் மற்றும் விராட் கோஹ்லி இருவரும் அரைசதம் அடித்தனர். விராட் கோஹ்லி அவர்கள் அரைசதம் அடித்து 85 ரன்களுக்கு ஆட்டமிழக்க தொடர்ந்து விளையாடிய கே.எல் ராகுல் அரைசதம் அடித்து 97 ரன்கள் சேர்த்தார்.

இதன் மூலமாக இந்தியா 52 பந்துகள் மீதமிருக்க 41.2 ஓவரில் 201 ரன்கள் எடுத்து இலக்கை அடைந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணியில் சிறப்பாக பந்துவீசி ஹேசல்வுட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மிட்செல் ஸ்டார்க் 1 விக்கெட்டை கைப்பற்றினார்.

மூன்று ரன்களில் சதத்தை தவறவிட்டு இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய கே.எல் ராகுல் ஆட்டநாயகன் விருதை வென்றார். மேலும் இந்தியாவுக்காக ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த விக்கெட் கீப்பர்களில் எம்.எஸ் தோனி அவர்களின் சாதனையை முறியடித்து இரண்டாவது இடத்தை பிடித்தார். ராகுல் டிராவிட் 145 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.