நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா- பாகிஸ்தான் அனல் பறக்கும் கிரிக்கெட் போட்டி! ஐசிசியிடம் எம்சிசி பரிந்துரை!

0
83

நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா- பாகிஸ்தான் அனல் பறக்கும் கிரிக்கெட்
போட்டி! ஐசிசியிடம் எம்சிசி பரிந்துரை!

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் பரிசீலனை செய்து வருகிறது.

கிரிக்கெட் உலகில் அநேகம் பேரால் பார்த்து ரசிக்கக்கூடிய போட்டி ஒன்று உண்டென்றால் அது இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியாகும். உலகெங்கிலும் இந்த இரு அணிகளின் போட்டிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே மைதானத்தில் அனல் பறக்கும். இந்த இரு அணிகளும் 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்த போட்டியிலும் விளையாடவில்லை. இரு அணிகளும் கடைசியாக டி20 உலகக் கோப்பை போட்டியில் மோதின.

இரு நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக நிலவிவரும் அரசியல் சார்ந்த பிரச்சனைகளால் இந்த இரண்டு அணிகளும் இருதரப்பு டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. இரு நாடுகளின் அணிகளும் விளையாட தங்களுக்குள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. ஆனால் இரண்டு அணிகளும் ஆசியக் கோப்பை மற்றும் உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்த இரு அணிகளும் மெல்போர்ன் மைதானத்தில் கடைசியாக மோதிய டி20 உலகக் கோப்பை போட்டியானது சுமார் 90 ஆயிரம் ரசிகர்களால் கண்டுக் களிக்கப்பட்டது. மேலும் அந்த மைதானத்தில் அதிக அளவு ரசிகர்களால் பார்க்கப்பட்ட போட்டிகளில் ஒரு போட்டியாக இந்த போட்டி அமைந்தது.

எனவே மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் எம்சிசி இந்தியா பாகிஸ்தான் இடையே போட்டிகளை நடத்துவதற்காக பரிசீலனை செய்து வருகிறது.

இந்த இரு அணிகளுக்கு இடையே மூன்று டெஸ்ட் போட்டிகள் நடந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். அதை ஆஸ்திரேலியாவுடன் எடுத்துக் கொள்வோம். இது மிகவும் சிக்கலானது. மேலும் மிகப்பெரிய சவாலாகவும் இருக்கும். கிரிக்கெட் ஆஸ்திரேலியா இதை ஐசிசியிடம் கோரிக்கையை முன் வைக்கும். உலகில் உள்ள சில மைதானங்கள் ரசிகர்கள் இல்லாமல் விளையாடுவதை பார்க்கும் பொழுது ரசிகர்கள் நிரம்பி வழிந்து விளையாட்டை கொண்டாடுவதும் மிகவும் சிறப்பு.

மெல்போர்ன் ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்த இந்தியா பாகிஸ்தான் அணிகள் விளையாடும் பொழுது ஏற்பட்ட ஒரு சூழலை போல இதற்கு முன் நான் உணர்ந்ததில்லை. ஆட்டங்களில் அனல் தெறித்ததோடு ஒவ்வொரு பந்திற்கும் பின்னர் ஏற்பட்ட சத்தங்கள் தனித்தன்மை வாய்ந்ததாக இருந்தது. மேலும் இந்த இரு அணிகளும் மோதும் போட்டிகளை குடும்பங்கள், குழந்தைகள் என அனைவரும் உற்சாகத்துடன் கண்டு களித்தனர் என மெல்போர்ன் கிரிக்கெட் கிளப்பின் தலைமை நிர்வாகி ஸ்டூவர்ட் பாக்ஸ் கூறியுள்ளார்.

விரைவில் இந்திய பாகிஸ்தான் அணிகள் களத்தில் மோதும் போட்டிகளை காண்பது அனைவரின் விருப்பமாக உள்ளது.