இந்த படிப்பு முடித்தவர்களும் சட்ட படிப்பிற்கு விண்ணபிக்கலாம்! உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! 

0
97
Those who complete this course can also apply for law school! The order issued by the High Court!
Those who complete this course can also apply for law school! The order issued by the High Court!

இந்த படிப்பு முடித்தவர்களும் சட்ட படிப்பிற்கு விண்ணபிக்கலாம்! உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

சென்னை உயர் நீதிமன்றம் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகதிற்கு உத்தரவு ஒன்றை பிறபித்துள்ளது.அந்த உத்தரவில் பத்தாம் வகுப்புக்கு பின் டிப்ளமோ முடித்து பொறியியல் படித்தவர்களும் மூன்றாண்டு சட்டப்படிப்புக்கு விண்ணபிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாண்டு சட்டபடிப்புக்கு விண்ணபிக்க பத்தாம் வகுப்பு,பிளஸ் டூ ,பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும் என இந்திய பார் கவுன்சில் முன்னதாகவே அறிவித்திருந்தது.மேலும் பத்தாம் வகுப்பு முடித்து விட்டு டிப்ளமோ முடித்த பொறியியல் பட்டம் பெற்றவர்களும்,சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க அனுமதி தொடர்பாக முடிவெடுக்க பார் கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் பிளஸ் டூ படிக்காமல், டிப்ளமோ முடித்த பிறகு பொறியியல் பட்டம் பெற்றவர்கள் சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை என கோவையை சேர்ந்த மாணவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.அந்த வழக்கானது நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்திய பார் கவுன்சில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பத்தாம் வகுப்பு பின் மூன்று ஆண்டுகள் டிப்ளமோ படிப்பை முடித்து பொறியியல் பட்டம் பெற்றவர்களும் மூன்றாண்டு சட்டப்படிப்பு படிப்பதற்கு விண்ணபிக்கலாம் என பார் கவுன்சில் முடிவெடுத்துள்ளது என கூறினார்.

மேலும் இதுகுறித்து நீதிபதி கூறுகையில் இனி வரும் ஆண்டுகளில் சட்டப்படிப்பு தொடர்பான கொள்கை விளக்கம் குறிப்பில் பத்தாம் வகுப்பு முடித்து டிப்ளமோ படித்து மூன்றாண்டுகள் பொறியியல் படித்தவர்களும் மூன்றாண்டு சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்  என அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

author avatar
Parthipan K