சீனாவை கடுமையாக எச்சரித்த இந்திய ராணுவத் தளபதி ஜோஷி.!

0
99

இந்திய சீன எல்லையில் சீனாவின் படைகளை கண்காணிக்க ஆபரேஷன் பனிச் சிறுத்தை திட்டம் தொடர்கிறது.எனவே எந்த வித அத்துமீறல்களில் ஈடுபட வேண்டாம் என்று சீனாவுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அண்டை நாடான சீனாவுடன் 2020 முதல் மோதல் போக்கு நிலவி வருகிறது.

எல்லையில் இருந்த வீரர்களை திரும்ப பெற சீனா மறுத்ததை தொடர்ந்து, பனிச்சிறுத்தை கண்காணிப்பு என்ற திட்டத்தை இந்திய ராணுவத்தினர் வகுத்தனர். இந்த திட்டத்தின் அடிப்படையில் லடாக் எல்லைப் பகுதியில் உள்ள பிரதான மலை சிகரங்களை கைப்பற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படியே மலை சிகரங்கள் கைப்பற்றப்பட்டு சீனப் படைகள் விரட்டியடிக்கப்பட்டன. தொடர்ந்து சீன ராணுவத்தின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்று உதம்பூரில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்திய ராணுவத்தின் வடக்கு பிரிவு தளபதியான ஜோஷி தெரிவித்திருந்தார்.

பனிச்சிறுத்தை திட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை; தொடர்ந்து நீடிக்கிறது. நம் ராணுவ வீரர்கள் முழு எச்சரிக்கையுடன் எல்லையில் செயலாற்றி வருகின்றனர் என்று இராணுவத் தளபதி ஜோஷி தெரிவித்திருந்தார்.