காவலர்களுக்கென புதிய செயலி அறிமுகம்! உடனுக்குடன் தகவலை பெறாலாம் டிஜிபி சைலேந்திரபாபு!

0
83
Introducing a new app for police officers! DGP Shailendrababu get information immediately!
Introducing a new app for police officers! DGP Shailendrababu get information immediately!

காவலர்களுக்கென புதிய செயலி அறிமுகம்! உடனுக்குடன் தகவலை பெறாலாம் டிஜிபி சைலேந்திரபாபு!

நேற்று மாலை  சென்னையில் உள்ள காவல் துறை தலைமையகத்தில் ஸ்மார்ட் காவலர் எனும் திட்டத்தின் தொடக்கவிழா நடைபெற்றது.அந்த விழாவில் தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் சி.சைலேந்திரபாபு பங்கேற்றார்.அவரே இந்த புதிய செயலியை தொடங்கி வைத்தார்.மேலும் இந்த செயலியை பற்றி அவர் கூறுகையில் ஸ்மார்ட் காவலர் செயலி ,காவல் துறையில் களப்பணியாற்றும் அலுவலர்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் அவர்களுடைய களப்பணிகளின்போது நிகழும் சம்பவங்களை உடனுக்குடன் இந்த ஸ்மார்ட் காவலர் என்ற செயலியின் மூலம் பதிவு செய்துகொள்ளாலாம்.

மேலும் அலுவலர்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலோ அல்லது உடனடி உதவிகள் தேவைப்பட்டாலோ அதுகுறித்து உடனடியாக உயர் அலுவலர்களுக்கு அவர்கள் தகவல் தெரிவிக்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.அதனையடுத்து இந்த புதிய செயலி காவல் துறை நிர்வாகத்திலும் பொது மக்களின் சேவையிலும் ஒரு மைல் கல்லாக அமையும் என்றும் தெரிவித்தார்.

தமிழக காவல் துறையில் சர்வதேச முறையில் பல்வேறு தொழில் நுட்பங்களைப் அறிமுகம் படுத்தி நவீனமயமாக்கும் பணிகளை அரசானது மேற்கொண்டு வருகின்றது.அதில் ஒரு பகுதியாக காவல் துறையினரின் செயல்திறனை மேம்படுத்தவும் ,குற்ற ஆவணங்களை சரியாக துல்லியமாக கவனித்து பதிவு செய்யவும் அந்த பதிவுகளை முறையாக பராமரிக்கவும் ,தரவுகளை சிறப்பாக கையாளும் வகையில் ஸ்மார்ட் காவலர் என்ற புதிய இணைய வழி செயலியை தமிழக காவல் துறை தற்போது அறிமுகம் செய்துள்ளது எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

author avatar
Parthipan K