சசிகலா அவர்களை சந்திக்கும் ஓ பன்னீர் செல்வம்!! ஜூன் 7ம் தேதி சந்திப்பு நிகழ்கிறதா..?

சசிகலா அவர்களை சந்திக்கும் ஓ பன்னீர் செல்வம்!! ஜூன் 7ம் தேதி சந்திப்பு நிகழ்கிறதா..?
அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் அவர்களும் சசிகலா அவர்களும் வரும் ஜூன் 7ம் தேதி சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தஞ்சாவூரில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அவர்களின் மகன் திருமண நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் 7ம் தேதி நடக்கவுள்ளது. இந்த திருமண நிகழ்ச்சியில் ஓ பன்னீர் செல்வம் அவர்களும், சசிகலா அவர்களும் கலந்துகொள்வதால் இருவரும் சந்தித்து பேச வாய்ப்பு இருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அவர்களின் மகன் சண்முகப்பிரபு – யாழினி திருமண நிகழ்வு ஜூன் 7ம் தேதி தஞ்சாவூரில் நடைபெறுகிறது. இந்த திருமண விழாவிற்கு ஓ பன்னீர் செல்வம் தலைமை வகிக்கிறார். திருமணவிழாவில் கலந்து கெள்ள அமமுக பொதுச் செயலர் தினகரன் மற்றும் சசிகலா அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதன் மூலம் சசிகலா அவர்களும் ஓ பன்னீர் செல்வம் அவர்களும் சந்த்தித்து பேசும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இது குறித்து ஓ பன்னீர் செல்வம் அவர்களின் ஆதரவாளர்கள் “சமீபத்தில் ஓ பன்னீர் செல்வம் அவர்களும் தினகரன் அவர்களும் சந்தித்து பேசினர். அதிமுக கட்சியில் பிரிந்து கிடக்கும் அணிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளோம். பிரிந்த அணிகள் ஒன்றிணைய வேண்டும் என்று சசிகலா அவர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளார். சசிகாலா அவர்களை விரைவில் சந்திப்பேன் என்று ஓ பன்னீர் செல்வம் அவர்கள் தெரிவித்திருந்தார். இதையடுத்து ஜூன் 7ம் தேதி நடைபெறும் வைத்திலிங்கத்தின் மகன் திருமண விழாவில் ஓ பன்னீர் செல்வம் அவர்களும் சசிகலா அவர்களும் சந்தித்து பேசலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளனர்.