நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் : பிரதமர் எதிர்க்கட்சி மீது குற்றம் சுமத்திவிட்டு சென்றுவிட்டார்!!

0
39

 

 

 

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் : பிரதமர் எதிர்க்கட்சி மீது குற்றம் சுமத்திவிட்டு சென்றுவிட்டார்

 

 

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பதில் அளித்து பேசிய போது எதிர்க்கட்சியை கடுமையாக சாடினார்.

 

 

பிரதமர் பேசியதாவது, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள இந்த நம்பிக்கையில் தீர்மானம் கடவுளின் ஆசிர்வாதமாக கருதுகிறேன் என்றும், நாட்டு மக்கள் எங்கள் மீதான நம்பிக்கையை உறுதி செய்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

 

 

 

நம்பிக்கை தீர்மானம் அரசுக்கு அதிர்ஷ்டத்தை தரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். அரசின் பலத்தை சோதிப்பதற்காகவே இந்த நம்பிக்கையில தீர்மானம் நாடாளுமன்றத்தில் நடைபெறுவதாக கூறிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து முந்தைய சாதனைகளையும் பாஜக முறியடிக்கும் என்றும் உற்சாகமாக பேசினார்.

 

 

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதத்தின் போது எதிர்க்கட்சிணல் நோ-பால்களாக வீசினர். எதிர்க்கட்சியின் மீது நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

 

 

எதிர்க்கட்சிக்கு நாட்டை விட அவர்களது கட்சிகள் தான் முக்கியமாக உள்ளது என்றும் எதிர்க்கட்சிக்கு ஏழைகளின் பசி மீது அக்கறை இல்லை அவர்களுக்கு பதவி ஆசை மட்டும் தான் உள்ளதாக தெரிவித்தார்.

 

 

ஊழல் செய்த எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர் எனவும்

 

 

ஐந்து ஆண்டுகள் வாக்களித்தும் எதிர்க்கட்சிகள் ஆட்சியில் அமர்வதற்கு தயாராக இல்லை, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது பேசிய எதிர்க்கட்சிகளால் முறையாக கேள்வி கேட்க முடியவில்லை என்றும் பிரதமர் அவர்கள் கூறினார்.

 

 

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பதில் உரைக்கு அடுத்து, நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து மக்களவை சாசபாநாயகர் ஓம் பிர்லா அவர்கள் முக்கிய முடிவெடுத்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

 

 

author avatar
Parthipan K