இன்றைய தினம் தொடங்கப்பட்ட தமிழக அரசின் முக்கிய திட்டம்!

0
56

திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் இந்து சமய அறநிலையத் துறையில் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கோவில் நிலங்கள் கையகப்படுத்துதல், நிலங்களின் விவரங்கள் தொடர்பான இணையத்தில் பதிவேற்றம் செய்தல், அதோடு அனைத்து சாதியினரும் அர்ச்சகர், தமிழில் அர்ச்சனை என்று பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த விதத்தில் கடந்த ஜூலை மாதம் மூன்றாம் தேதி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் தமிழ் அர்ச்சனை செய்யவிருக்கும் ஆட்சியாளர்களின் விவரங்கள் அடங்கிய பதாகை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். அதனை எதிர்த்து இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கின்றன 47 முதல் நிலை ஆலயங்களில் அர்ச்சகர்கள் விபரங்கள் அடங்கிய பதாகைகள் வைப்பது தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதோடு தமிழ் மொழியில் அர்ச்சனை மற்றும் வழிபாடு செய்வதற்கு ஏற்ற விதத்தில் 12 இறைவன் போற்றி பாடல் இருக்கின்ற புத்தகத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். இதனை அடுத்து இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட ஆலயங்களில் படிப்படியாக தமிழ் அர்ச்சனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த சூழ்நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழில் அர்ச்சனை திட்டம் இன்றுமுதல் ஆரம்பமாகியது. கோவில் இணை ஆணையர் அன்புமணி முன்னிலையில் அர்ச்சகர்கள் சுப்பிரமணிய சுவாமிக்கு தமிழில் அர்ச்சனை செய்தார்கள்.