ஆதார் அட்டைக்கு கடன் தருகிறதா மத்திய அரசு? வெளியான உண்மை!

0
94

மத்திய அரசிடமிருந்து பொதுமக்களுக்கு கடன் உதவி வழங்கப்படுவதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. அதாவது அனைத்து ஆதார் அட்டைகளுக்கும் மத்திய அரசு 4.78 லட்சம் கடன் கொடுப்பதாக அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நிதி உதவி தேவைப்படுபவர்கள் செய்தியுடன் இருக்கின்ற லிங்கை கிளிக் செய்யுமாறு அதில் கூறப்பட்டுள்ளது. அதே நேரம் இந்த செய்தி முற்றிலும் போலியானது என்று PIB சார்பாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சகத்தின் சார்பாக இது போன்ற எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக BIP ஃபேக்ட் செக் அமைப்பு தெரிவித்ததாவது, அனைத்து ஆதார் அட்டைகளுக்கும் மத்திய அரசு 4.78 லட்சம் கடன் வழங்க இருப்பதாக செய்தி ஒன்று உலா வருகிறது. இது போலியானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு இந்த செய்தியை யாருக்கும் பரப்ப வேண்டாம் உங்களுடைய நிதி விவகார தகவல்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் எனவும், அந்த அமைப்பு கூறியுள்ளது.

இணையதளங்களில் நாளுக்கு நாள் மோசடி அதிகரித்து வருகிறது ஆகவே அது தொடர்பாக வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் அவசியமாகிறது. அதிலும் குறிப்பாக அரசு சார்பாக தங்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. தங்களுக்கு வங்கி கடன் வழங்குவதற்கான ஒப்புதல் கிடைத்திருக்கிறது, இந்த இணையதளத்தில் சலுகை விலையில் பொருட்கள் விற்கப்படுகிறது, என்று ஏதோ ஒரு தலைப்பை வைத்து சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பப்படுகின்றன என கூறப்பட்டுள்ளது.

மேலும் குறிப்பிட்ட உதவி அல்லது சலுகையை பெறுவதற்கு அவர்கள் நினைத்துள்ள லிங்க் உள்ளே செல்ல வேண்டும் என்று சொல்லப்படும். அதனுள் சென்றால் நம்முடைய பெயர், வங்கி கணக்கு எண், உள்ளிட்ட விவரங்களை பெற்று மோசடி செய்து விடுகிறார்கள். ஆகவே இது போன்ற மோசடிகள் தொடர்பாக வாடிக்கையாளர்கள் கவனமுடன் இருப்பது மிகவும் அவசியம் என்று அவ்வப்போது அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.

போலி செய்திகளை கண்டறிவது எப்படி?

சந்தேகத்திற்கு உள்ளான குறுஞ்செய்தி உங்களுக்கு வருகிறது என்றால் அது உண்மையானதா? அல்லது போலியா என்பதை தாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு அரசு ரீதியான தகவல்கள் என்றால் அதனை நீங்கள் fact check.pub.gov.in என்ற இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.

தகவல்களை உறுதி செய்யாமல் ஏதாவது ஒரு லிங்கை கிளிக் செய்து அதில் கேட்கப்படும் உங்களுடைய தனிப்பட்ட விபரங்கள் மற்றும் வங்கி கணக்கு விபரங்களை நீங்கள் கொடுத்து விட்டால் நீங்கள் மோசடிக்கு ஆளாக்கப்படலாம்.